1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அறிமுகம் செய்யப்படும் தேசிய நல்லிணக்கச் சட்ட வரைவு ‘மத்திய கட்டத்தில் இருப்பதாக சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார்.
“முதல், இரண்டாம், மூன்றாம் கட்டம் மரணம் நான்காம் கட்டம் எனச்
சொல்வதற்கு சட்ட வரைவு என்பது புற்று நோயைப் போன்றது அல்ல.”
“நாங்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என நான் உங்களுக்குச் சொல்ல
முடியாது. ஆனால் பெரும்பாலும் நாங்கள் மத்திய கட்டத்தில் இருப்பதாக நான் தெரிவிக்க முடியும்,” என அப்துல் கனி இன்று நிருபர்களிடம் கூறினார்.