தேர்தல் நீதிமன்றம், மே 5 பொதுத் தேர்தலில் மாச்சாங்கில் பாரிசான் நேசனலின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி பிகேஆர் செய்துகொண்டிருந்த தேர்தல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
மனுதாரர் 1954 தேர்தல் முறையீட்டு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறிய நீதிபதி ஜமானி அப்துல் ரஹிம் செலவுத் தொகையுடன் அதைத் தள்ளுபடி செய்தார்.
அத்தொகுதியில் மாச்சாங் அம்னோ தொகுதித் தலைவர் அஹ்மட் ஜஸ்லான் பிகேஆரின் வான் ஜவாவி வான் இஸ்மாயிலை 805 வாக்குகளில் தோற்கடித்தார்.