மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அயல்நாடுகளில் கணக்கு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்திய சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் டெக் மெங் (இடம்), நாடாளுமன்றத்தின் உரிமை மற்றும் சலுகைக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்படுவாரா என்பது விரைவில் தெரியவரும்.
அவ்விவகாரம்மீது வியாழக்கிழமை விவாதிக்கப்படும் என மக்களவைத் தலைவர் தம்மிடம் தெரிவித்திருப்பதாக பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸின் குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அன்வார் 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதாக விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி லியாங் கூறியிருந்தார்.