கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் பரிவாரத்துடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரிம 44 மில்லியன் செலவிடப்பட்டிருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
இது, 2008, மார்ச் மாதத்திலிருந்து 2013-வரை மேற்கொள்ளப்பட்ட பயணங்களுக்கான செலவுத்தொகை என தைப்பிங் டிஏபி எம்பி இங்கா கொர் மிங்-கின் கேள்விக்கு எழுத்து வடிவில் அளித்த பதிலில் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.