‘தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதிலாக அமையும் சட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்ந்து வைத்திருக்கப்படும்’

sedition actதேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்படும் தேசிய நல்லிணக்கச்  சட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்ந்து  வைத்திருக்கப்படும்.

மலாய் ஆட்சியாளர்கள் அவமானப்படுத்தப்படுவது அல்லது அவர்களுக்கு  விசுவாசம் காட்டாதது ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சமாளிப்பதும்  அவற்றுள் அடங்கும்.

இனப் பதற்ற நிலையை உருவாக்கும் தீய நோக்கம் கொண்டவர்களை
கட்டுப்படுத்தவும் கூட்டரசு அரசமைப்பில் எழுதப்பட்டுள்ள நிலை, சலுகைகள் மீது  கேள்வி எழுப்பும் நடவடிக்கைகளை சமாளிக்கவும் புதிய சட்டம்  பயன்படுத்தப்படும் என உத்துசான் இணையப் பதிப்பான Utusan Onlineல் செய்தி  வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் நடவடிக்கைகளை அனுமதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும்  என்ற யோசனையையும் நஜிப் நிராகரிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றாலும் அந்த விஷயம் கவனமாக ஆராயப்படும் என்றும் போலீஸ்,சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மற்ற சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஆகியவற்றின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அவர் சொன்னார்.

TAGS: