பிலிப்பினோக்காரர், முஸ்லிம் பெயரைப் பெற்றதும் மலேசியர் ஆனார்

news17713dபிலிப்பின்ஸில் பிறந்த கிறிஸ்துவர் ஒருவர், ஆவண நடைமுறைகளை சுமூகமாக்கும் பொருட்டு தமது தந்தையின் நண்பரால் முஸ்லிம் பெயர்  கொடுக்கப்பட்ட பின்னர் மலேசியப் பிரஜையானதாக சபா குடியேற்றக்காரர்கள்  மீதான அரச விசாரணையத்திடம் இன்று கூறப்பட்டது.

தாம் 9 வயதாக இருந்த போது முகமட் யூசோப் என்னும் பெயரைக் கொண்ட ஒர்  ஆடவர் தம்மையும் தமது இரண்டு உடன் பிறப்புக்களையும் ‘தத்து’ எடுத்துக்  கொண்டதாக அந்த ஆணையத்திடம் ஜானி அமுலெஸ் என்ற அசல் பெயரைக்  கொண்ட ஷாபீ முகமட் யூசோப் தெரிவித்தார்.

அதனால் தாம் சபாவில் பிறக்கவில்லை என்றாலும் தாமதமான பிறப்புச்  சான்றிதழைப் பெறுவதற்கு முடிந்தது என்றும் அதற்குப் பின்னர் மை கார்டு  கிடைத்தது என்றும் அவர் சொன்னார்.

ஷாபி எந்த ஆவணமும் இல்லாமல் தமது வளர்ப்புத் தந்தை, தாய், ஒரு சகோதரி,  ஒரு சகோதரர் ஆகியோருடன் தாம் ஆறு வயதாக இருந்த போது  பிலிப்பின்ஸிலிருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

TAGS: