‘அடையாளக் கார்டை குடியேற்றக்காரர்கள் வாக்களிப்புக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்’

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளக் கார்டுகளை ‘வாக்களிப்புக்கு மட்டுமே’  பயன்படுத்த முடியும் என சில சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சுஹாக்காம்  என்ற மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாக அதன் முன்னாள்  உதவித் தலைவர் சைமன் சிப்பாவுன் கூறியுள்ளார்.

அவர், சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திற்கு  முன்பு சாட்சியமளித்தார்.

தங்களுக்கு அடையாளக் கார்டுகள் கிடைத்த போதிலும் தங்கள் பிள்ளைகளுக்கு  விண்ணப்பிக்கப்பட்ட போதிலும் அந்த ஆவணங்கள் தரப்படவில்லை என்றும்  அந்தக் குடியேற்றக்காரர்கள் புகார் செய்ததாகவும் சைமன் சொன்னார்.

குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படுவது சபாவை ‘முஸ்லிம்  மாநிலமாக’ மாற்றும் நோக்கம் என்று சொல்லப்படுவதுடன் தொடர்புடையது என  ஜெப்ரி கிட்டிங்கான், டாக்டர் சொங் எங் லியோங் ஆகிய சபா அரசியல்வாதிகள்  ஏற்கனவே கூறிக் கொண்ட கருத்தை சைமனும் அந்த ஆணையத்திடம்  தெரிவித்தார்.

குடியேற்றக்காரர்கள் சபா மக்களாக மாறும் பிரச்னை விரைவாக
தீர்க்கப்படாவிட்டால் ‘சபா அவர்களுடைய கரங்களில் நிச்சயம் விழுந்து விடும்’  என்றும் அவர் எச்சரித்தார்.

சைமன் 1988 முதல் 1993 வரை சபா மாநில அரசாங்கச் செயலாளராகவும்  பணியாற்றியுள்ளார்.

 

TAGS: