505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எம்பி-க்கள், பக்காத்தான் ஊழியர் மீது குற்றம் சாட்டப்படும்

505 blackout 1ஜுன் 22ம் தேதி பாடாங் மெர்போக்கில் நிகழ்ந்த 505 கறுப்பு தினப் பேரணி தொடர்பில் இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள், பக்காத்தான் ராக்யாட் ஊழியர்  ஒருவர் ஆகியோர் மீது அமைதியாக கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும்.

சிரம்பான் எம்பி அந்தோனி லோக், பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில்,  பக்காத்தான் ராக்யாட் செயலக உறுப்பினர் அடிப் இஸ்ஹார் ஆகியோரே அந்த  மூவர் ஆவர்.

ஜுலை 24ம் தேதி ஆந்த மூவரும் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் இருக்க  வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் செஷன்ஸ் நீதிமன்றமா  அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்றமா என்பது கூறப்படவில்லை என்றும் தொடர்பு  கொள்ளப்பட்ட போது வழக்குரைஞர் லத்தீப்பா கோயா கூறினார்.

 

TAGS: