இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம் உங்களுக்கு தந்தது

1 ink“பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா  மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய  இசி மறந்து விட்டதோ ?’

அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு

அனோன்xyz: உலகம் முழுவதும் குத்தகைகள் தொடர்புகள் அடிப்படையில் தான்  கொடுக்கப்படுகின்றன. ஆனால் மலேசியாவில் மட்டும் ஒரு விஷயம்  புதுமையானது. இங்கு அரசியல்வாதிகளும் நல்ல தொடர்பு உடையவர்களும் இனக்  கவசம் என்ற போர்வையில் பாதுகாக்கப்படுகின்றனர்.

‘இக்கட்டான மலாய் சூழ்நிலை’ (Malay Dilemma) என்னும் புத்தகத்தின் மூலம்  டாக்டர் மகாதீர் முகமட் தமது ‘பெருந்திட்டத்தை’ வெகு காலத்துக்கு முன்பே  தொடங்கி விட்டார். மலாய்க்காரர்களிடமிருந்து சீன தவக்கைகள் செல்வத்தைத்  திருடுவதாக அவர் அந்தப் புத்தகத்தில் புகார் கூறினார்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து புதிதாக உருவான மலாய் தவக்கைகளுடன் சீன,  இந்திய தவக்கைகளும் செல்வத்தில் கொழிக்கத் தொடங்கினர். டாக்டர்  மகாதீருக்கும் அவரது கும்பலுக்கும் அந்த வளப்பத்தில் பெரும்பங்கு இருப்பதாகக்  கூறப்படுகின்றது.

கல்வி தொடக்கம் பொருளாதாரம் வரையில் ஜோடிக்கப்பட்ட இனவாத
பிரச்னைகளினால் தூண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் ஒருவருக்கு ஒருவர்  குரல் வளையை நெறித்துக் கொண்டிருந்த வேளையில் எல்லா இனங்களையும்  சார்ந்த தவக்கைகளும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளும் ஒன்று  கூடி கோல்ப் விளையாடினர். ஒருவரை ஒருவர் முதுகில் தட்டிக் கொண்டனர்.  வங்கிகளிலும் அவர்களுக்குப் பணம் குவிந்தது.

ஹெர்மிட்: பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் அவர்களே, தயவு செய்து அந்த  அழியா மை கொடுக்கப்பட்ட குத்தகைப் பிரதியை பெறுவதற்கு முயற்சி  செய்யுங்கள். அந்த மைக்கு வழங்கப்பட்ட சிறப்புக் குறிப்புக்களை அறிய நாங்கள்  விரும்புகிறோம்.

இசி தனது கடமைகளை விவேகமாகச் செய்ததா இல்லையா என்பதை அது  உறுதிப்படுத்தும். விநியோகம் செய்யப்பட்ட மைக்கும் அந்தக் குறிப்புக்களுக்கும்  உள்ள வேறுபாட்டை அறியவும் இயலும்.

ராக்யாட்: பெயர்ப் பலகை இல்லாத ஒரு நிறுவனம். என் இந்திய தையற்காரர்  தமது வீட்டுக்குள் சிறிய கடையை வைத்துள்ளார். அதற்குக் கூட பெயர்ப் பலகை  உள்ளது. இந்த நிறுவனத்தை இசி எப்படிக் கண்டு பிடித்தது ? மேல் மாடியிலா ?

பினாங்கிலிருந்து: அந்த நிறுவனத்தின் முக்கிய தொழில் என்ன ? அழியா மையை  வழங்குவதில் அவற்றுக்கு அனுபவம் உண்டா ? மையை சோதிப்பதற்கு அதனிடம்  தொழில்நுட்பர்கள் இருந்தார்களா ?

ஆக்குதுவான்: என் மலாய் நண்பர் 2 ரிங்கிட் நிறுவனத்தை நடத்துகிறார். அதற்குப்  பெயர்ப் பதிவு உண்டு. ஒரு நபர் நடத்தும் ‘ஆ பெக்’ நிறுவனத்துக்குக் கூட  பெயர்ப் பலகை உண்டு. ஒரு நாற்காலி , மேசையுடன் சிறிய அலுவலகத்தைக்  கொண்டுள்ள இந்திய முதியவர் கூட பெயர்ப் பலகையை வைத்துள்ளார்.

பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா  மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய  இசி மறந்து விட்டதோ ?

கேகன்: அந்த ஊழல் நிறைந்த பேரத்தின் மூலம் யாரோ ஒருவர் நிறையப் பணம்  பண்ணியிருக்கிறார். அந்த நிறுவனத்துக்குப் பெயர்ப் பலகை இல்லை. காரணம்  அது வழக்கமான வழிகளில் வர்த்தக செய்வதில்லை.

துனார்மி: ராபிஸி நீங்கள் செய்தது நல்ல காரியம். அந்த நிறுவன இயக்குநர்களான  முகமட் சாலே முகமட் அலியும் நோர்ஷியா யூசோப் வெளியில் வர முடியாது.  ஏனெனில் அவர்கள் கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கு ‘அழியா மையாக’  பயன்படுத்தப்படவிருக்கும் பெலிக்கான் மையுடன் கலப்பதற்காக அவர்கள் பழச்  சாறுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

TAGS: