கோலா பெசுட் இடைத்தேர்தல்: நாள் ஒன்பது
தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், இன்று கொங் கெடாக் அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்துக்குச் சென்று அங்கு முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுவதைப் பார்வையிட்டார்.
அங்கு சென்றடைந்ததும், வான் அஹ்மட் தம் இடக் கை சுட்டுவிரலை உயர்த்தி அதில் மை பூசப்பட்டிருப்பதைக் காண்பித்தார்.
“இன்று ஆறாவது நாள். என்னென்னவோ போட்டுக் கழுவிப் பார்த்தேன். போகவில்லை”, என்றார்.
கோலா பெசுட்டில் முன்கூட்டிய வாக்காளர்களாக 1,134 இராணுவத்தினரும் 14 போலீஸ்காரர்களும் உள்ளனர்.
தேர்தல் ஆணையத் தலைவர் என்னன்னவோ போட்டுக் கழுவியது தால் தான் அது போகவில்லை. நாங்கள் எல்லாம் பாவிக்கும் சராசரி சவக்காரம் பாவித்தாலே போதும். ஒரு பத்து நிமிடங்களில் பஞ்சாய் பறந்து விடும்! இது கூட தெரியாத ………..!
முகத்தில் கரியை பூச பட வேண்டியவன் விரலில் பூசினானாம் !