பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீது அவதூறு வழக்குப் போடப் போவதாக புக்கிட் பெசி பிகேஆர் வேட்பாளர் முகமட் சம்சுல் மாட் அமின், கோத்தா புத்ரா பிகேஆர் வேட்பாளர் முகமட் அப்துல் கனி இப்ராஹிம், செபராங் தாக்கிர் பிகேஆர் வேட்பாளர் அகமட் நஸ்ரி முகமட் யூசோப் ஆகியோர் அவதூறு வழக்குப் போடவிருக்கின்றனர்.
கடந்த மே 5 பொதுத் தேர்தலில் ஏழு இடங்களில் பக்காத்தான் தோழமைக்
கட்சியான பிகேஆர் வேட்பாளர்களை எதிர்த்து தனது சொந்த வேட்பாளர்களைப் பாஸ் நிறுத்தியதற்கான காரணங்களைத் தெரிவித்த போது ஹாடி கூறிய கருத்துக்கள் தொடர்பில் அந்த அவதூறு வழக்குப் போடப்படுவதாக முகமட் சம்சுல் சொன்னார்.
பிகேஆர் வேட்பாளர்கள் methamphetamine பொருளை விற்பதாக
அஞ்சப்படுவதாலும் தங்கள் தலைமையகத்தில் அந்த வேட்பாளர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களுடைய உருவப் படங்களை தொங்க விட்டுள்ளதாகவும் ஹாடி சொன்னார். ஆனால் அவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
ஹாடியின் உரையின் விளைவாக தமது கிராம மக்கள் தம்மை கேலி செய்வதாகவும் ஒதுக்குவதாகவும் சம்சுல் கூறிக் கொண்டார்.