“துரதிர்ஷ்ட வசமாக மஇகா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் செத்துப் போன குதிரை மீது தான் சவாரி செய்ய வேண்டும்”

mic-logo“நாடு பற்றி எரியவில்லை. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீப்பற்றிக்  கொண்டு விட்டது. அது இப்போது ஒரு வழியாக எரிந்து முடிந்து விட்டது”

“நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்”

Cogito Ergo Sum: அந்த எழுத்தாளர் ஆர்கே ஆனந்த் மிகவும் சரியாக எழுதியிருக்கிறார். ஆனால் நஜிப் இந்திய சமூகத்துடன் நேரடியாகத் தொடர்பு  கொண்டதின் மூலமும் ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தியை அமைச்சரவைக்கு  நியமித்ததின் மூலமும் அதனைச் செய்துள்ளதாக நான் எண்ணுகிறேன்.

எதிர்கால மலேசியன்: மிக நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. மலேசியாவில் இந்திய  சமூகம் பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. மலேசியாவில் வாழும்  இந்தியர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. தலைவர்கள்  எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் மக்கள், தின்பண்டத்தில் எந்தப் பகுதி இனிப்பானது என்பது மீதே சண்டையிட்டுக் கொள்கின்றனர். அவர்கள் நமக்குத்  தேவையா ?

கேஎஸ்என்: யாருக்கு அம்னோ பாரு அரசாங்கம் வீசும் துண்டுகளும் எலும்புகளும் கிடைக்கும் என்பதே யார் வெற்றி பெறுவார் என்ற விஷயத்தில்  முக்கியமானதாகும். மலேசிய இந்தியர்களுக்கு அல்ல.

2008, 2013 தேர்தல் முடிவுகள் இந்தியர்களுடைய உணர்வுகளை எடுத்துக் காட்டி  விட்டன. தங்களுடைய இன்றைய நிலைக்கும் தாங்கள் ‘ஒதுக்கப்பட்டதற்கும்’ கடந்த  25 ஆண்டு காலத்தில் இருந்த மஇகா, அம்னோ பாரு தலைவர்களே பொறுப்பு  என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அடையாளம் இல்லாதவன்#33877536: நாடு பற்றி எரியவில்லை. அதில் பல  ஆண்டுகளுக்கு முன்னரே தீப்பற்றிக் கொண்டு விட்டது. அது இப்போது ஒரு வழியாக எரிந்து முடிந்து விட்டது.

அரசாங்கத்தில் அந்தக் கட்சி இந்தியர்களுடைய குரலாக இருக்க முடியாது.  மெட்ரிக்குலேஷன் மாணவர் சேர்க்கையைக் கூட கல்வித் துணை அமைச்சர் என்ற  முறையில் பி கமலநாதனால் கூட தீர்க்க முடியவில்லை.

மக்கள் மேலாண்மை: அம்னோ புத்ராக்கள்’ மலேசிய இந்திய சேவகர்களினால்  (The Umnoputras’ Malaysian Indian Cronies) (MIC)  மலேசிய இந்தியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அது மடிய விட்டு  விடுவோம்.

இல்லை என்றால் அவர்கள் அரசியலிலிருந்து விலகி இந்திய பண்பாட்டுப்  பிரச்னைகளில் கவனம் செலுத்தலாம். அதன் வழி அவர்கள் மலேசிய  இந்தியர்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகின்றவர்களாக இருக்க முடியும்.

நம்பாதவன்: இது என்னுடைய இலவச ஆலோசனை: ‘Harasendiri’ செய்து  கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள மஇகா-வும் மசீச-வும் ஜப்பானுக்குச்  செல்ல வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் அவற்றை தொடர்ந்து ஆதரித்தால்  அதற்கான பழி அவர்களையே சார வேண்டும். இந்தியர்களும் சீனர்களும் தாங்கள்  முதுகெலும்பை மீட்க வேண்டும்.

நோஸ்ட்ரா: துரதிர்ஷ்டவசமாக மஇகா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் செத்துப்  போன குதிரை மீது தான் சவாரி செய்ய வேண்டும்.

TAGS: