சரவாக் டிஏபி அம்மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் அதன் கிளைகளை அமைக்கும். கிராமப்புறங்களில் பிஎன்னுக்குள்ள செல்வாக்கை உடைத்தெறியும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று கூறிய அதன் தலைவர் சொங் சியெங் ஜென், அதற்காக சுமார் ரிம 600,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய சீரமைப்பு அல்லது ‘ubah'(மாற்றம்) காண்பது சரவாக் கிராமப்புறங்களில் என்ன சாதிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கும்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். .
நல்ல முயற்சிதான் , ஆனால் இது சாத்தியமாகுமா ? கிராமப்புற வாசிகள் குறிப்பாக ரூமா பாஞ்சாங் மக்களையும் , ஓரங் உழு , புனான் , மூருட் , கேலாபிட் மக்களின் மனதில் இடம்பிடிப்பது சுலபமல்ல. கலாச்சாரத்திலும் , கட்டுப்பாட்டிலும் ஊறிப்போனவர்கள். தலைவன் வழியே நாங்கள் , தலைவனோ , என் தலைவன் வழிதான் என்று போகக்கூடியவர்கள். இன்னமும் 20 ஆண்டு பின்தங்கிய சிந்தைகள் , இதுதான் அவர்களின் வாழ்கை ! அரசியலைப்பற்றிய முழு விழிப்பு அதன் தாக்கம் புலப்படாமல் வாழும் அன்பு ஜீவன்கள் அவர்கள். அதனாலையே, தைபுன் , அல்பிரெட் ஜாபுவும் மகாராஜாவாக வாழ்கிறார்கள். DAP முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.