“இன்றைய பிஎன் அரசியல்வாதிகளிடம் உள்ள பிரச்னையே இது தான். எதையாவது -அது சரியோ தவறோ- சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும் என எண்ணுவதாகும்”
‘இனவாத மருத்துவர்கள்’ எனச் சொன்னதற்காக மன்னிப்புக் கேளுங்கள் என பேராளருக்கு அறிவுரை’
சென்யூம் உந்தா: மூன்று மலேசியச் சீன மருத்துவர்கள் இனவாதிகள் என மாநிலச் சட்டமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கு முன்னர் பினாங்கு துங்கால் சட்டமன்ற உறுப்பினர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
அவர் ஏன் முதலில் உண்மை நிலையை அறிய முயலவில்லை ? வதந்திகள் அடிப்படையில் அமைந்த அதனை விசாரிப்பதற்கு அதிகாரிகள் எவ்வளவு நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்திருப்பார்கள் ? வதந்திகளை அடிப்படையாகக் கொண்ட எல்லா விஷயங்களையும் அதிகாரிகள் விசாரிக்க முடியுமா ?
உங்கள் அடிச்சுவட்டில்: ரோஸ்லான் உங்கள் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும் மலாய்க்கார நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சீன மருத்துவர்கள் மறுப்பதாக நீங்கள் சொல்லக் கூடாது ?
இது உண்மையில் தேச நிந்தனைத் தன்மையைக் கொண்டது. இன வெறுப்பைத் தூண்டக் கூடியது.
குறிப்பிட்ட சில மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அதனை விசாரிக்குமாறு அதிகாரிகளை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
உண்மையில் அல்விவி வலைப்பதிவு ஜோடி செய்த அதே மாதிரியான கடும் குற்றத்தை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அதிகாரிகள் உங்கள் மீது குற்றம் சாட்ட வேண்டும். ஜாமீனும் மறுக்கப்பட வேண்டும்.
முகமட் அப்துல் மாலிக்: அதிகாரிகள் விசாரனைகளை முடிக்க நாம் முதலில் அனுமதிப்போம். இப்போது நமக்கு உண்மை நிலை தெரியாது. ரோஸ்லான் பொய்யர் என இப்போது முடிவுக்கு வருவது நேர்மையற்றது.
அவரது குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனத் தெரிந்தால் அவர் மீது
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவை உண்மை எனத் தெரிந்தால்
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
யாஹு: ரோஸ்லான் சொல்கிறார்: பிரச்னை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதனை எழுப்பினேன்.” ரோஸ்லான் அவர்களே சட்டமன்றத்திற்கு அதனை எழுப்பும் முன்னர் சில ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.
அன்றாடம் பல பிரச்னைகள் எம்பி-க்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கொண்டு செல்லப்படுகின்றன. ஆதாரம் இல்லாமல் அவற்றை சட்டமன்றத்தில் நீங்கள் சொல்லப் போகின்றீர்களா ? எல்லா 222 எம்பி-க்களும் 576 சட்ட மன்ற
உறுப்பினர்களும் அதனைச் செய்து கொண்டிருந்தால் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் கொள்கை விஷயங்களை விவாதிக்கவே நேரம் இருக்காது.
சூடான கோங்: இன்றைய பிஎன் அரசியல்வாதிகளிடம் உள்ள பிரச்னையே இது தான். எதையாவது -அது சரியோ தவறோ- சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும் என எண்ணுவதாகும்.
அத்தகைய பொய்யர்கள் மக்களுடைய நம்பிக்கையை இறுதியில் இழக்க வேண்டும். ஆனால் இங்கு மக்கள் தங்கள் பேராளராக அவர்களைத் தேர்வு செய்கின்றனர்.
கற்பனை அல்ல உண்மை: அம்னோ இனப் பூசலைத் தூண்டுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. பேசுவதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் அது ஏதாவது ஒரு கதையை ஜோடித்து விடும்.
பொது மக்களுக்கு சேவை செய்யும் போது எந்த ஒரு மலேசிய அரசாங்க
ஊழியரும் இனவாத உணர்வுகளை பெற்றிருக்க மாட்டார் என நான் நம்புகிறேன்.
லிம் சொங் லியாங்: மாநிலச் சட்டமன்றத்தில் அப்பட்டமாகப் பொய் சொல்வதற்கு இப்போது அம்னோ அகராதியில் தவறான புரிந்துணர்வு என அழைக்கப்படுகின்றது.