சீனத் தலைவர்கள் பலர், தனியார் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாகரிகம் பற்றிய கல்வி கற்பிக்கப்படுவதை (டிட்டாஸ்) எதிர்ப்பது ஏமாற்றமளிப்பதாக யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) பேராசிரியர் தியோ கொக் சியோங் கூறுகிறார்.
அக்கல்வியால் சீனச் சமூகத்தினர் நன்மை அடைவர் என்பதால் அவர்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்றாரவர்.
நமது வரலாற்றையும் நாகரிகத்தையும் அறியாத குடிமக்களும் இருக்கிறார்கள். அவர்களின் அறியாமையைப் போக்கத்தான் தனியார் கல்விக்கூடங்களில் டிட்டாஸ் கொண்டுவரப்படுகிறது.
“புரிதலை மேம்படுத்தி ஒற்றுமையை வலுப்படுத்தி அதன்வழி தேசிய அடையாளத்தை உருவாக்குவதுதான் அதன் முடிவான நோக்கமாகும்”, என்றாரவர்
இந்த சீனன் தனக்குத் தெரிந்தே முட்டாள்தனமாக பேசுகிறான். கருங்காலிகள் எங்கும் உண்டு!