ஆம்பளையாக இருந்தால் குற்றச்சாட்டை மறுபடியும் சொல்லட்டும்: ரபிஸிக்கு இசி தலைவர் சவால்

Abdul Aziz Mohd Yusof1தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர், அப்துல் அசீஸ் யூசுப்,  பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.

தமக்கும் தம் உதவித் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமாருக்கும் அழியா மை விநியோகிப்பாளருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய ரபிஸிக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியில் அதைச் சொல்லும் துணிச்சல் உண்டா என்றவர் வினவினார்.

“அவர் உண்மையிலேயே ஆண்மகனாக இருந்தால் ஒரு வாரத்துக்குள் அதே குற்றச்சாட்டை நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூறட்டும்”, என்றாரவர்.

 

TAGS: