தியான் சுவா பத்து தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்

chuaபிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, மே 5 பொதுத் தேர்தலில் பத்து  நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என கோலாலம்பூர்  தேர்தல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கெரக்கான் இளைஞர் பிரிவுத் தலைமைச் செயலாளர் டாக்டர் டொமினிக் லாவ்  சமர்பித்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஸபாரியா முகமட் யூசோப், பிஎன்  மனு முழுமையானதாக இல்லை என்றார்.

“முதலாவது பிரதிவாதி எழுப்பிய தொடக்க நிலை ஆட்சேபத்தை நீதிமன்றம்  ஏற்றுக் கொள்கின்றது.”

தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் அமர்ஜித்  சிங் பிஎன் -னுக்கு எதிராகச் செலவுத் தொகையைக் கோரவில்லை.

அதற்கு முன்னதாக தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் எழுப்பிய  தொடக்க ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்ட ஸபாரியா அந்தத் தொகுதியை பிஎன்  தக்க வைத்துக் கொள்ளும் என தீர்ப்பளித்தார்.

அப்போது பாஸ் வேட்பாளருக்கு எதிராக 50,000 ரிங்கிட் செலவுத் தொகைக்கு  அந்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் விண்ணப்பித்துக் கொண்டார்.

 

TAGS: