வாக்குகளுக்கான பணம் என நிரூபிக்கப்பட்டாலும் அந்தப் பணத்தை பிஎன் வேட்பாளர் கொடுக்கவில்லை என இசி சொல்லும்
கிராமத் தலைவர்கள் வீடுகளுக்கு முன்னால் வாக்காளர்கள் ‘ரொக்கப்பணத்துக்காக’ வரிசையாக நின்று கொண்டிருந்தனர்
கிம் குவேக்: வாக்காளர்களுடைய போக்குவரத்துச் செலவுகளுக்காக ரொக்கப் பணம் கொடுக்கப்பட்டாலும் அது 1954 தேர்தல் சட்டத்தின் பிரிவு 20(1)ன் கீழ் சட்ட விரோதமாகும்.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்தப் பணத்தை
கொடுத்தவர்களுக்கும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் 5,000 ரிங்கிட் அபராதம் (பிரிவு 27) விதிக்கப்பட முடியும்.
ஆகவே அதனை தேர்தல் ஆணையமும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரித்து அது சட்டவிரோதமானது என நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யவும் வேண்டும்.
நியாயமான ஆட்டம்: அம்னோவை திருத்தவே முடியாது. அது தனது வஞ்சனை நோக்கங்களை அடைய அப்பட்டமாக ஊழலில் ஈடுபடும். வாக்குகளுக்கான பணம் என நிரூபிக்கப்பட்டாலும் அந்தப் பணத்தை பிஎன் வேட்பாளர் கொடுக்கவில்லை என இசி சொல்லும். எம்ஏசிசி வழக்கம் போல ஏதும் செய்யாது.
ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். வேண்டப்பட்டவர்களுக்கு திட்டங்களை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை என திரங்கானு மந்திரி புசாரே ஏற்கனவே சொல்லி விட்டாரே !
2zzzxxx: நான் பல முறை சொல்லி விட்டேன். நீங்கள் அம்னோவில் இருந்தால் சட்டங்களுக்கு மேலானவர்கள். பட்டப்பகலில் அவர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர். நீங்கள் வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து அதற்கு ‘duit raya’, ‘பஸ் கட்டணம்’ என்று கூடச் சொல்லலாம். எல்லாம் ஒகே தான்.
ஜோ லீ: அவர்களை ஏழைகளாக வைத்திருங்கள். முட்டாள்களாக வைத்திருங்கள். அது தான் அம்னோ ஒரே மலேசியா போடோ கொள்கையின் அமலாக்கம்.
பிடிஎன் மூலம் அரசாங்க ஊழியர்களை மூளைச் சலவை செய்யுங்கள்.
சீனர்/இந்தியர் பூச்சாண்டிகளை உருவாக்குங்கள். தேர்தல் வரும் போது அரசாங்க எந்திரத்தையும் அரசாங்கப் பணத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.
அம்னோ சில சமயங்கள் முட்டாளாகத் தெரியலாம். ஆனால் இந்த வழி முறை கடந்த 50 ஆண்டுகளாக அதற்கு வெற்றியை அளித்துள்ளது. எல்லா முட்டாள்களையும் (உங்களையும் என்னையும் சேர்த்துத் தான்) 50 ஆண்டுகளாக அது ஏமாற்றி வந்துள்ளது.
பால் வாரென்: தோழர்களே உங்களுக்கு நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். கொடுத்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் தான்.
எதையாவது கொடுங்கப்பா