பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் மாற்றியது

ipoh high courtஎம் இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவர்களுடைய தந்தை இந்திரா  காந்திக்குத் தெரியாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை ஈப்போ உயர் நீதிமன்றம்  இன்று மாற்றியுள்ளது. அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமானதாகும்.

பிள்ளைகள் மீது kalimah syahadah (இஸ்லாத்தை தழுவுவதற்கான அறிவிப்பு)  செய்யப்படாததால் அந்தப் பிள்ளைகள் மதம் மாற்றப்படவில்லை என நீதிபதி லீ  ஸ்வீ செங் கூறினார்.

அத்துடன் மதம் மாற்ற நடவடிக்கை பெண்களுக்கு எதிரான எல்லா வகையான  பாகுபாடுகளையும் அகற்றும் ஐநா ஒப்பந்தத்திற்கு முரணாகவும்  அமைந்துள்ளதாகவும் நீதிபதி சொன்னார்.

“இந்த முடிவு யாருக்கும் வெற்றி அல்ல. நாம் நல்லிணக்கத்துடன் வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும்,” என நீதிபதி லீ ஒரு மணி 40 நிமிடத்திற்கு வாசித்த தமது  தீர்ப்பில் குறிப்பிட்டார்.