நிபந்தனையற்ற முறையில் போக்குவரத்துப் பணம் கொடுப்பது கையூட்டல்ல

Tan-Sri-Abdul-Aziz-Mohd-Yusofதேர்தல் காலத்தில் போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுப்பது கையூட்டல்ல. ஆனால், அதில் நிபந்தனை எதுவும் ஒட்டிக்கொண்டிருக்ககூடாது என்கிறது தேர்தல் ஆணையம் (இசி).

பணம் கொடுப்பவர் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறினால் மட்டுமே அது சட்டமீறலாகும் என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.

கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத் தலைவர் யாகோப் காதிரிடமிருந்து பணம்  பெற்றார்கள் என்று கூறப்படுவது பற்றி அவர் கருத்துரைத்தார்.

“அவ்விவகாரம்மீது அதிகாரப்பூர்வ புகார் எதையும் இசி பெறவில்லை”, என்று அவர் மலேசியாகினிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

 

TAGS: