‘Saya Pilih BN’ இசி-க்கு குற்றமாகத் தெரியவில்லை

BN“எந்த நிபந்தனையும் இல்லாமல் மோசடிக்காரர்கள் இனிமேல் எம்ஏசிசி, போலீஸ்,  நீதிபதிகள் ஆகிய தரப்புக்களுக்கு பணத்தையும் கொடுக்கலாம். இலவச  விடுமுறைகளையும் வழங்கலாம்”

இசி: நிபந்தனையில்லாத போக்குவரத்துச் செலவுப் பணம் லஞ்சம் அல்ல

லெலிஸ்டாய்: இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவர்களே, உங்கள்  பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஒருவர் 200 ரிங்கிட்  முதல் 300 ரிங்கிட் வரை ஏன் கொடுக்கிறார் என்ற கேள்வியை எழுப்புங்கள்.

தேர்தலுக்கு முன்னதாக அந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதே
கேள்விக்குரியதாகும். அந்த அம்னோ தலைவர் ஏன் ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை  கொடுக்கிறார் என நான் உங்களைக் கேட்டு அம்னோவுக்கு வாக்களிப்பதற்காக  இல்லை என்றால் நீங்கள் எனக்கு ஒரு ரிங்கிட் கூடக் கொடுக்க மாட்டீர்கள்.

நீங்கள் அந்தக் குற்றச்சாட்டை ஒதுக்காமல் குறைந்த பட்சம் அதனை
விசாரியுங்கள்.

பாவி: நல்லது. எந்த நிபந்தனையும் இல்லாமல் மோசடிக்காரர்கள் இனிமேல்  எம்ஏசிசி, போலீஸ், நீதிபதிகள் ஆகிய தரப்புக்களுக்கு பணத்தையும்  கொடுக்கலாம். இலவச விடுமுறைகளையும் வழங்கலாம் என்பது அதன் அர்த்தமா  ?

கிம் குவேக்: ‘எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவதை  ஊக்குவிக்கும் நோக்கத்துடன்’ கொடுக்கப்படும் எதுவும் சட்ட விரோதமானது என  1954ம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் 20வது பிரிவு சொல்கிறது.

ஆகவே அந்தப் பணம் தரப்பட்டதற்கான காரணம் தான் குற்றத்தை அல்லது  நிரபராதி என்பதை நிர்ணயம் செய்கின்றது.

எனவே அந்தத் தேர்தலில் பிஎன் வேட்பாளர் வெற்றி பெற உதவுவதற்காக அந்த  பணம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியை கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத்  தலைவர் யாக்கோப் காதிரிடமும் அவருக்கு பின்னால் உள்ள நிதியாளரிடமும்  எழுப்புங்கள்.

அதற்குப் பதில் ஆமாம் என்றால் அவர்கள் சட்ட விரோதக் காரியத்தைச்
செய்துள்ளனர். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவர்களுக்கு 5,000  ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம். பிஎன் வேட்பாளர்களுக்கு  வாக்களிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டார்களா இல்லையா என்பது  முக்கியமல்ல.

நம்பாதவன்: மலேசியாகினி படத்தில் ‘Saya Pilih BN’ எனக் கூறும் வில்லை  ‘போக்குவரத்துச் செலவுப் பணத்துக்கு’ வாக்காளர்கள் கையெழுத்திட்ட மேசையில்  கண்ணுக்குத் தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

பிஎன் -னை ஆதரிக்குமாறு வாக்காளர்களை அது ஊக்குவிக்கவில்லையா ? இசி  பதில் சொல்ல வேண்டும்.

ஒஎம்ஜி: போக்குவரத்துச் செலவுத் தொகை லஞ்சம் அல்ல. Duit raya -வும் லஞ்சம்  அல்ல. மேம்பாட்டு வாக்குறுதிகள், இலவச விருந்துகள், அதிர்ஷ்ட குலுக்குகள்,  தேர்தலுக்குப் பின்னர் பணத்தைப் பெறுவதற்கான கூப்பன்கள் ஆகியவையும்
லஞ்சம் அல்ல. ஏன் ரொக்கப் பணத்தை வெளிப்படையாக விநியோகம் செய்யக் கூடாது ?

லோ சீ குவான்: ஆகவே அடுத்த முறை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர்  என்னை நிறுத்தும் போது ‘லஞ்சத்திற்கு’ பதில் போக்குவரத்து விதிகள்  பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அவர் எடுக்கும் அயராத முயற்சிகளுக்கு ‘duit  kopi’-யை அவருக்குக் கொடுத்தால் அது தவறல்ல சரி தானே ?

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் கொடுக்க விரும்பும் ‘saman’-னை (
போக்குவரத்துக் குற்றப்பதிவு) ஒதுக்கி வைக்குமாறு நான் கேட்டுக் கொள்ளவில்லை  என்பதால் நான் அவருக்கு ‘லஞ்சம்’ கொடுக்கவில்லை. அது அவருடைய கடமை  என்றாலும் மகத்தான வேலையைச் செய்யும் அவரது முயற்சிகளுக்காக நான் ‘bagi
minum kopi’ கொடுக்கிறேன்.

அந்த ‘saman’ ரத்துச் செய்வது அவரைப் பொறுத்ததாகும். அவரது வேலைக்கு  நான் அவருக்கு வெகுமதி கொடுக்கிறேன். நிச்சயம் அதே வாதம் எடுபடும்.

 

TAGS: