இந்திராவுக்கு வெற்றி தான் ஆனால் ஏஜி முறையீடு செய்வார்

indira‘அரசாங்கம் விரைவில் முறையீடு செய்யும். அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள்  மாற்றும். அடுத்து எல்லாம் பழைய கதை தான்’

இஸ்லாத்துக்கு பிள்ளைகளை மதம் மாற்றியதை நீதிமன்றம் மாற்றியது

சின்ன அரக்கன்: இது வரலாற்றுச் சிறப்புடைய முடிவாகும். இந்த நாட்டில்  பிள்ளைகள் தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதை நிறுத்தவும் இன நல்லிணக்கத்தை  மேம்படுத்தவும் விரும்பி னால் அரசாங்கம் ஈப்போ உயர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யக் கூடாது.

நீதிமன்ற முடிவைத் தான் மதிப்பதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்  மட்டுமே இந்திரா காந்தியும் அவரது பிள்ளைகளும் கொண்டாட முடியும்.

பியட் ஜஸ்டிடா ருவான் காலும்: இது சிறிய வெற்றி தான் என்றாலும்
அர்த்தமுள்ளது. முறையீடு செய்யப்படும் என நான் அஞ்சுகிறேன்.

ஹங் துவா: மூன்றாவது பிள்ளைக்கு என் அனுதாபங்கள். ஐந்து ஆண்டுகளாக  அதற்குத் தாய்ப் பாசமும் கவனிப்பும் கிடைக்கவே இல்லை. தாய்ப் பாசம்  குழந்தைக்குக் கிடைக்காமல் தடுப்பதற்கு தந்தைக்கு உரிமையே இல்லை.

அந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் தந்தையின் கன்னத்தை அறையும் என நான்  நம்புகிறேன். தாய்ப் பாசத்திற்கு எல்லை இல்லை. யாரும் அதனைத் தடுக்கக்  கூடாது.

ஜனநாயகம்: இது மனிதனுடைய அடிப்படை உரிமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.  சமயப் பிரச்னை அல்ல. ஆகவே இதனை சமய விவாதமாக்கி விட வேண்டாம்.

அபசாலோம்: அந்தத் தீர்ப்பு தாய்க்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால்  எந்த சமயத்தையும் குறை கூறுவதற்கு அதனை வாய்ப்பாக எடுத்துக் கொள்ளக்  கூடாது. சமய வெறியர்கள் என நாம் மற்றவர்களை குறை சொல்லி விட்டு நாமே  பாரபட்சம் காட்டக் கூடாது.

தங்கள் சொந்த ஆதாயத்துக்காக சமயங்களுக்கும் இனங்களுக்கும் இடையில்  வேற்றுமையை உருவாக்க அயராது  முயலுகின்றவர்களிடம் அந்த வெறித்தனத்தை  விட்டு விடுவோம்.

துனார்மை: இஸ்லாம் நேர்மையான நியாயமான சமயம். இஸ்லாத்தை தங்கள்  முயற்சிகள் வலுப்படுத்தும் என்ற தவறான எண்ணத்துடன் மற்ற சமயங்களைக்  கீழறுப்புச் செய்கின்ற சமயத் துறைகளில் பணியாற்றும் கோமாளிகளினால்
இஸ்லாத்துக்கு தவறான தோற்றம் தரப்பட்டு விடுகின்றது.

ஜேஎம்சி: இதோ இன்னொரு துணிச்சலான நியாயமான நீதிபதி. ஆனால்  அவருடைய தீர்ப்பு நிலைத்திருக்குமா ? அரசாங்கம் விரைவில் முறையீடு  செய்யும். அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள் மாற்றும். அடுத்து எல்லாம் பழைய  கதை தான். மீண்டும் மீண்டும் அதே சர்க்கஸ். நமது நிலை எவ்வளவு பரிதாபமாகி  விட்டது பார்த்தீர்களா ?

கேசி919: நீதிபதி லீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் நல்ல விதமாக  சொற்களை சேர்த்துள்ளீர்கள். புனிதமான மனதுக்கு யாரும் வெற்றியாளர் இல்லை.  தோல்வி கண்டவரும் இல்லை. மனதில் உள்ள ‘ஆணவம்’ தான் தோல்வி  அடைந்தவரிடமிருந்து வெற்றியாளரைப் பிரிக்கின்றது.

 

 

TAGS: