இண்ட்ராப், சிறையில் உள்ள அதன் தலைவர் பி.உதயகுமாரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் காஜாங் சிறைச்சாலைக்குமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 1, உதயா மருத்துவரைக் காண்பதற்கான நாளாகும்.
அதிகாரிகள் அதற்கு இணங்காவிட்டால் உதயகுமாரின் துணைவியார் எஸ்.இந்திரா தேவியின் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் சிறைச்சாலை முன்புறம் முகாமிடுவார்கள் என்று இண்ட்ராப் தலைமைச் செயலாளர் எஸ். தியாகராஜன் இன்று கூறினார்.
ஹிண்ட்ராப் பூச்சாண்டி எல்லாம் BN னிடம் செல்லாது நண்பரே ! அந்த பேர் இயக்கத்தை கெடுத்ததும் நீங்கள் தானே ! பாவிகளா அது NGO வாக இருந்தால் இந்திய மக்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கும் ,அரசியல் ஆசை வந்து கெடுத்து விட்டீரே !