ஹலோ, உண்மையைச் சொல்வது தேச நிந்தனை அல்ல

schoolபொது நலன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தில் முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரைத் தவறாக மேற்கோள் காட்டுவது தேசநிந்தனையாகக் கருதப்படலாம்’

தாம் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக இடைக்கால போலீஸ் தலைவர் சொல்கிறார்

கலா: சொன்னது, சொல்லாதது குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் போலீஸ் படை இடைக்காலத் தலைவர் ஏ தெய்வீகனுக்கு நன்றி. வெளிப்படையாகச் சொல்வதற்கு உங்களுக்குத் துணிச்சல் வந்துள்ளது.

உத்துசான் மலேசியா கதைகளை ஜோடிப்பதில் மன்னன் என்பது மீண்டும் தெரிந்துள்ளது. அது முழுக்க முழுக்கக் கொள்கையில்லாத, தொழில் ரீதியாக செய்திகளை வெளியிடாத பத்திரிக்கையாகும்.

தோலு: தெய்வீகன் சொல்லாததை உத்துசான் வெளியிட்டுள்ளது. பொது மக்களை மிரட்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அந்த வார்த்தைகளை அந்த ஏடு வெளியிட்டிருக்க வேண்டும்.

அது ஆதாரமற்ற ஆபத்தான வதந்திகளைப் பரப்புவதற்குச் சமமாகும். அந்த வதந்திகளினால் இந்த நாட்டில் பல்வேறு இனங்களுக்கு இடையில் பதற்றமும் ஏற்படக் கூடும். ஆகவே அது நிச்சயம் தேசநிந்தனையானது. தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் உத்துசான் மீது வழக்குப் போட வேண்டும்.

Advocatus_Diaboli: தெய்வீகன் அந்த ‘குறிப்பிட்ட’ பத்திரிக்கைக்கு எதிராகப் போலீசில் புகார் செய்ய வேண்டும். பொய்யான செய்திகளை வெளியிட்டு வெறுப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்த முயன்றதற்காக அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தெளிந்த நீர்: பொது நலன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தில் முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரைத் தவறாக மேற்கோள் காட்டுவது தேசநிந்தனையாகக் கருதப்படலாம் . அந்தச் செய்தியை வெளியிட்ட நிருபரைக் கைது செய்யுங்கள். தூண்டி விடும் அந்தப் பத்திரிக்கையை மூடுங்கள்.

குளியலறையில் மாணவர்கள் இருப்பதைக் காட்டும் படங்கள் ‘தேசநிந்தனையாக’ இருக்கலாம்

சின்ன அரக்கன்: ஆளும் வர்க்கத்திடம் நல்ல பெயரை எடுக்க விரும்பும் அதன் தீவிர ஆதரவாளர்களும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக எல்லாவற்றுக்கும் தேசநிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக மருட்டுவதின் மூலம் தங்களை முற்றாக கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ளனர்.

அரசாங்கம் எது தேசநிந்தனை எனச் சொல்வதற்குப் பதில் எது தேச நிந்தனை அல்ல எனச் சொல்லக் கூடாது ? ஒரு வேளை எதுவும் இல்லையோ ?

மக்கள் ‘ஜடங்களாக’ வாழ வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறதோ என்னவோ ? அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த நாட்டை முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற அரசாங்கம் விரும்புவது அந்த வழியில் தானா ?

தோலு: ஆகவே தகவல்களைப் பரிமாறிக் கொள்வது அதிகார வர்க்கத்துக்கு பாதகமாக இருந்தால் அது தேசநிந்தனையாகும். என்ன வேடிக்கை. உண்மையைச் சொல்வது தேச நிந்தனை அல்ல.

ஆகவே மலாய்க்காரர் அல்லாதார் அம்னோவுக்கு வாக்களிக்காததும் தேசநிந்தனையாகும். ஏனெனில் அது ‘இனப் பூசலுக்கு வழி வகுத்து விடும்’.

சந்தேகத்துக்குரிய மலாய்க்கார கிரிமினல்களை  மலாய்க்காரர் அல்லாத போலீஸ்காரர்கள் கைது செய்யும் படங்கள் கூட தேசநிந்தனையாகலாம்.

தேசநிந்தனை நடவடிக்கைகளுக்கும் தனிநபர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோருவதற்கான சுதந்திரத்துக்கும் இடையிலான வேறுபாட்டை உணருவதற்குத் தயவு செய்து கற்றுக் கொள்ளுங்கள்.

ஏஞ்சலாபாய்: உங்கள் பெயரைக் கேட்டதும் மற்றவர்கள் பரபரப்பு அடைந்தால் அதுவும் தேசநிந்தனையாகலாம். அடுத்து என்ன ? சைகைகள் கூட தேசநிந்தனையாகலாம். இந்த நாட்டில் என்ன தான் நடக்கிறது ?

அனோன்1098: தேசநிந்தனைச் சட்டம் போக வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அதற்கு அவதூறைப் போல அல்லாது ‘உண்மை’ என்னும் தற்காப்பே இல்லை.

அது இருக்கும் வரை ஆட்சியாளர்கள் அதனை அரசியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்துவர். செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்ற மக்கள் மீது (எளிதான இலக்குகள்) போலீசார் மூண்டும் குறி வைப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

பிடிப்பதற்கு அவர்களுக்கு உண்மையான கொள்ளைக்காரர்களே இல்லையா ?

 

TAGS: