13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர்கள் சமர்பித்த தேர்தல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் விதம் குறித்து பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆத்திரமடைந்துள்ளார்.
“எங்கள் வழக்குரைஞர்கள் கோலாலம்பூரில் ஒர் அறிவிப்பை வெளியிடுவார்கள். நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்,” என அவர் நேற்றிரவு பினாங்கில் கூறினார்.
“தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப்படுவது தொடர்பில் உறுதியான நிலையை எங்கள் வழக்குரைஞர்கள் நாளை அறிவிப்பர். எதிர்த்தரப்பு வேட்பாளர்களுக்குச் செலவுத் தொகையைக் கொடுக்குமாறும் வேட்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”
“அந்த வழக்குகள் விசாரணைக்குச் செல்லாமலேயே நீதிபதிகள் தொழில்நுட்ப அடிப்படையில் அந்த மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர்,” என செபராங் ஜெயாவில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அன்வார் நிருபர்களிடம் பேசினார்.
“அது பிஎன் -னுக்கு நிகழ்ந்தாலும், தொழில்நுட்ப காரணங்களுக்காக அதன் வழக்குகள் நிராகரிக்கப்பட்டாலும் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம்,” என்றார் அவர்.
அவர்.
மலேசிய ஒரு நேர்மையற்ற நாடு…!
மலேசியாவை பற்றிய நாகராஜா சோழன் MA MLA வின் ஒரு வரி கட்டுரைக்கு முதல் பக்க தலைப்பு செய்திக்கு நன்றி. என்ன
கண்டுபிடிப்பு ? நாட்டை குறை சொல்லாதீங்க சார் நாட்டின் நியாயமற்ற மனிதர்களை சாடுங்கள்.