அம்னோ தேர்தல் நெருங்குகிறது, அதிகமான இனவாதக் ‘கடிகளை’ எதிர்ப்பார்க்கலாம்

say“அம்னோ பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கைப்பாவை என்ற உண்மையான வரலாற்றை காட்டும் திரைப்படத்தை யாராவது தயாரிக்க வேண்டும்”

சீனர் புதுக் கிராமம் பற்றிய திரைப்படத்தை அம்னோ இளைஞர் பிரிவு  சாடுகின்றது

சிவிக்: நான் அந்த ‘புதுக் கிராமம்’ திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆகவே நான்  அது குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை. அது ‘கம்யூனிசத்தைப் புகழ்கிறது’  என அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம்  சொல்வதையும் நான் நம்பவில்லை. காரணம் அவரும் அந்தத் திரைப்படத்தை
முழுமையாகப் பார்த்திருக்க முடியாது.

குரல்: அந்த ‘புதுக் கிராமம்’ திரைப்படம் இடங்களுக்கு இடையில் வெறுப்பைத்  தூண்டும் என்றால் அதனை தடை செய்யுங்கள்.

அதே போன்று ‘தண்டா புத்ரா’ திரைப்படத்தையும் தடை செய்யுங்கள். அந்த ‘புதுக்  கிராமம்’ திரைப்படம் கம்யூனிசத்தைப் புகழ்கிறது என்பது முக்கியமல்ல.

மை4ஹோப்: ஆமாம். கம்யூனிஸ்ட்கள் பிசாசுகள் தான். ஆகவே தயவு செய்து  சீனாவுடனான அரசதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளுமாறு நமது  வெளியுறவு அமைச்சுக்குச் சொல்லுங்கள்.

ஹோல்டன்: லோக்மான் நூர் அடம், முடிந்த வரை உரத்த குரலில் தொடர்ந்து  பேசுங்கள். கற்பனையாக எழுதப்பட்ட அந்தக் கதைக்கு நிறைய விளம்பரம்  கிடைக்கும்.

அதே வேளையில் ‘தண்டா புத்ரா’, உங்கள் கட்சியின் ஆதிக்கத்தை நிலை
நிறுத்துவதற்கு வரலாற்று நிகழ்வு ஒன்றுக்குக் கற்பனைக் கணக்கு கொடுக்கப்பட்ட  திரைப்படமாகும்.

கிறிஸ்டபர் லோய்: எவ்வளவு முட்டாள்தனம்- ஒன்று திரைப்படம் ( கற்பனை,  காதல் கதை, அறிவியல் கற்பனை ஆகியவை திரைப்படங்களாகும்)

இன்னொன்று குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது இனத்தின் மீது ஆத்திரத்தை  மூட்டுவதற்காக காரண காரியத்துடன் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். ( உண்மை  நிலையை எதிர்கொள்ளுங்கள்- நீங்கள் நம்ப வேண்டும் என அவர்கள் விரும்பும்  வரலாறு அது தான்)

பல இனம்: ‘தண்டா புத்ரா’ பொது மக்களுக்கு திரையிடப்படுவது
நிராகரிக்கப்பட்டது என்றால் அவர் சொல்வதில் ஒரளவு நியாயமிருக்கிறது.  இப்போது ‘தண்டா புத்ரா’ திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் ஏன் இன்னும்  புகார் செய்கிறார் ?

புகார் செய்ய வேண்டும் என்பதற்காக லோக்மான் புகார் செய்கின்றாரா அல்லது  அம்னோ தேர்தல் வருகிறது என்பதாலா ? மற்றவர் கண்களுக்குத் தாம்  தென்படுவதை உறுதி செய்ய அவர் ஒரு பிரச்னையைத் தேட வேண்டியுள்ளது.

சூப்பர்செஷன்: அம்னோ பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கைப்பாவை  என்ற உண்மையான வரலாற்றை காட்டும் திரைப்படத்தை யாராவது தயாரிக்க  வேண்டும்.

மாற்றம்: லோக்மான், ‘தண்டா புத்ரா’ உடனடியாகத் திரையிடப்பட வேண்டும்  எனக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆய்வுக்காகவும் முன்  கூட்டியும் அம்னோ நேயர்கள் மன்றத்தினால் சட்ட விரோதமாகவும் அது  திரையிடப்பட்டு மக்கள் தொகையில் பாதிப் பேர் ஏற்கனவே அந்தத்  திரைப்படத்தைக் கட்டாயமாகப் பார்த்து விட்டனர்.

 

TAGS: