13வது பொதுத் தேர்தல் மனுக்களை நிராகரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் மனுதாரர்கள் கொடுக்க வேண்டும் என ஆணையிடும் செலவுத் தொகை தண்டனை மிகவும் அதிகமாக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.
‘ஒடுக்குமுறையான’ அந்த செலவுத் தொகை தண்டனை மனுக்கள்
கொடுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
எடுத்துக்காட்டுக்கு பாலிக் புலாவ் தேர்தல் மனுதாரரான முகமட் பக்தியார் வான் சிக் 120,000 ரிங்கிட் செலவுத் தொகை கொடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
ஆணையிடப்படும் செலவுத் தொகை அது போன்ற சிவில் வழக்குகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் ‘தேர்தல் மனுக்கள் பொது நல வழக்கு என்னும் நிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும் அது இருக்க வேண்டும் என்றும்
அன்வார் குறிப்பிட்டார்.