கடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ செங் குவான், துணை அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பி. வேதமூர்த்தி, டாக்டர் லோகா பால மோகன் ஜகநாதன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா ஆகியோரே அந்த ஐவராவர்.
இவ்வழக்கு நாளை காலை மணி 9.00க்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஸலிஹா யூசுப் முன் விசாரணைக்கு வருகிறது.
அரசியல் பின்னனியுடைய சில கொலைக்காரர்களை தண்டிச்சாலே நீதிபதியையே தூக்கிடுறானுங்க, சிங்கத்துக்காக எவனும் வாய திறக்கமாட்டறானுங்க. நீ என்னப்பா 5 மந்திரியை தூக்க சொல்ற, அப்புறம் நீதிபதிய எங்க தேடறதுனு தெரியாம போயுடும். அல்தான்துயா வெளி நாட்டுகாரி அதனால கொஞ்சம் வெளிய வந்தது. ஆமாம் ரோஸ்மாவுக்கு காப்பேட் வித்த சிங்க காணாமே எங்க போயிட்டாரு?
இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் அவனுங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி…முழுசாவே முழுங்கிடுவானுங்க – உங்களையும் சேர்த்து.
இதுவரையில் யாரும் தொடர முன்வராத வழக்கு!
குலா முனைந்துள்ளார், வாழ்த்துகள். அவர் வெற்றி பெற்று வரலாறு படைக்கட்டும். மக்களும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
செனட்டர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது மாறாக எதிர்கட்சி உறுபினர்களை மக்கள் அமைச்சர்களாக நியமிக்க அரசர் முன் வர வேண்டும் இதுதான் உருமாற்றம்.
குலாவின் வழக்கு தவறு உள்ளது. வேதா மற்றும் வாஹித் ஜூன் 5ஆம் தேதி காலையில் முதலில் செனட்டர் பதவி ஏற்ற பின்பு அன்று மாலைதான் அமைச்சர் பதவி ஏற்றனர்.