‘ரோஜாப் பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும். அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் எல்லாம் ஒன்றே தான்.’
கைரி: கம்யூனிஸ்ட் கட்சி மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை போன்றதல்ல
பார்வையாளன்: ‘புதுக் கிராமம்’ என்ற அந்தத் திரைப்படம் பற்றி மற்றவர்களைப் போல நானும் நேற்று வரை கேள்விப்படவே இல்லை.
நமது வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் அமைக்கப்பட்ட புதுக் கிராமத்தில் நிகழ்ந்த காதல் கதை அந்தத் திரைப்படம் எனத் தெரிகிறது.
அதில் கம்யூனிச அம்சம் இருப்பதாகச் சொல்வது எனக்குப் புரியவில்லை.
வீரா: இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் அவர்களே, மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி மலேசிய வரலாற்றில் ஒரு பகுதியாகும். ஒரு கட்சி முதலாளித்துவக் கேடுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முயன்று தோல்வி கண்டதை அந்த வரலாறு குறிக்கிறது.
அது சீன சமூகத்தின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் இனவாதமாக அது ஒரு போதும் இருந்தது இல்லை. அதன் சரணாகதியை மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆயுதப் போராட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவ ரீதியில் வேறுபாடுகள் இல்லை. முன்னது வெற்றி பெற்றது. பின்னது வெற்றி அடையவில்லை.
ஒடின்: பெயரில் என்ன இருக்கிறது ? கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் தான். ரோஜாப் பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும். அது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் எல்லாம் ஒன்றே தான்.
ஜெரோனிமோ: கைரி உங்களுக்கு வரலாறு தெரியாது. அவசர காலத்தின் போது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது உங்களுக்குத் தெரியுமா ?
சபாக்காரன்: அம்னோவில் அறிவாற்றலைக் கொண்ட ஒருவர் இருப்பதாக எண்ணியிருந்தோம். ஆனால் அம்னோவில் தொடர்ந்து இருந்தால் அறிவாற்றல் மழுங்கி விடும் என்பது இப்போது தெரிகின்றது.
மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்று
அமைக்கப்பட்டதாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கால ஒட்டத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விட்டது. ஆனால் அம்னோ தொடர்ந்து கழிசடையான அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
கேலி செய்கிறேன்: கைரி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில்
பெரும்பாலோர் இப்போது ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளனர். அங்கு உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.