போலீஸ் காவலில் இருந்த என்.தர்மேந்திரனைக் கொன்றதாக இன்ஸ்பெக்டர் எஸ்.ஹரிகிருஷ்ணன்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஹரிகிருஷ்ணன் அவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாலாவது நபராவார்.
வழக்கு விசாரணைக்கான நாள் பிண-பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் முடிவுசெய்யப்படும் என நீதிபதி நூர் அமினாதுல் மர்டியா முகம்மட் நூர் கூறினார். அது ஆகஸ்ட் 2 -வாக்கில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை நாளும் தலைமறைவாக ஹரிகிருஷ்ணன் நேற்று போலீசில் சரணடைந்தார்.
ஹரிகிருஷ்ணன் தாம் குற்றமற்றவர் என்று கூறிக்கொள்கிறார். “சில தரப்பினரைப் பாதுகாக்க” அவர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறாராம்.
சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டதன் விளைவு. தன் நிலை மறந்து வரம்பு மீறி செயல்படும் ஒரு சில போலிஸ்காரர்களுக்கு இது தேவைதான்.
போலிஸ் லாக்கப்பில் ஒரு தமிழன் இறந்து போனால் ஒரு தமிழர் தான் குற்றம் சாட்டப்படுகிறார்! புரியவில்லையே!
ஹரிகிருஷ்ணன் உனக்கு தமிழனை தவிர அடுத்த ஜாதி கிட்ட வீராம் கட்ட முடியாது. ஒரு தமிழனை தமிழன் தான் சாக அடிக்கிறான்!
உயர் பதவிக்கு ஆசை பட்டு அநியாயமாக ஒரு கொலை குற்றவாளி கூண்டில் நிற்கிறாய். இருக்கும் இந்திய போலிஸ் அதிகாரிகள் கொஞ்சம் தான். இப்படி ஒவ்வொருவனும் தவறு செஞ்சா அப்புறம் எப்படி இந்த துறையில் நாம் கொடி கட்டி பறக்க முடியும். ஒரு காலத்தில் நம் இன போலிஸ் அதிகாரிகள் பேரும் புகழும் நம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள். இன்று உங்களை போன்றோர் புழுதியை நம் முகத்தில் வாரி இரைக்கிறீர்கள். எண்ணி தலை குனிய வேண்டி உள்ளது.