மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கக் கூட்டிணைப்பு (மைக்கி), அரசாங்க ஆதரவுடன் நடக்கும் அனைத்துலக விற்பனைச் சந்தைகளால் தங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதாகக் கூறும் வியாபாரிகளுக்கும் வணிகர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.
அந்தச் சந்தைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மைக்கி தலைவர் கே.கே. ஈஸ்வரன், அதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார்.
“விழாக்காலங்களில்தான் சட்டப்பூர்வமான வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும், ஆனால், இப்படிப்பட்ட விற்பனைச் சந்தைகள் அவர்களின் வியாபாரத்தைப் பாதிக்கின்றன”, என்றவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
டட்தோ கென்னத்… கோடிகணக்கில் பெரும் வணிக கண்காட்சிகள் தாம் இன்று நம் இந்தியர்கள் தமிழர்கள் சக்திக்கேற்ப சின்ன வணிக சந்தைகளாக உருவாகி விழ்க்காலங்களில் எதோ சமுதாய பொருளாதார மேம்பாட்டிற்கு சமாளிக்கின்றன. உங்களைபோல் கோடிக்கணக்கில் ABN போன்ற 2/ 3 பில்லியன் மீண்டும் ஒரு டிவி கேளிக்கை மார்க்கட்டை மடக்கி அரசு நிதி பெற்று பயனீடாளர் அடக்கி போடா சிறு சிறு வணிகர்களால் முடியாததால் தான் இந்த வழியை கண்டோம் இதுக்கும் உங்கள் போன்றோர் பிரதமரை பார்த்து வேட்டு வெச்சா நாங்கள் என்ன செய்வது.இதுக்கு ஒரு சம்மேளனம் தேவையா?
கடைகளுக்கு சேவா தந்தே நொடிச்சி போன சமுதாயம் இப்படி அன்ஜெடி அடிபடைக்கே ஆப்பா?
நமது பெரிய பெரிய ஜவுளி கடைகள் ஷாப்பிங் கொம்ப்ளெக்ஸ்களில் பெரிய பணக்கார மார்க்கெட் consumerism கவர காலம்
வந்து விட்டது அதை போய் பார்க்கவும்.
முதலில் ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு உங்கள் மேல் சுமத்தப் பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டிற்கு பதில் கூறுங்கள்.. ஆயிரக் கணக்கில் நம் இனத்தவர் வியாபாரக் கடன் கிடைக்காமல் தவித்திருக்க.. உன் ஒருவனுக்கு மட்டும் கோடிக்கணக்கில் கடன் வசதி செய்துகொண்டாய்..!
விற்பனைச் சந்தை நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அதனை ஒரு புதையலாக பார்க்க ஆரம்பித்து விட்டது. அதனால் வெளிநாட்டு சந்தையாளர்களாக வந்தவர்கள் இங்கேயே மந்தை மந்தையாக வந்து தங்களது மார்க்கெட்டை விரிவு படுத்தி விட்டனர். இப்போது இவர்கள் பெரிய வியாபாரிகளுக்கு மிரட்டலாகி விட்டனர். காவல் துறையை நாம் என்ன செய்ய முடியும்!
50 கோடி வெள்ளி சும்மாவா? எதோ ஒரு அமைப்புக்கு தலைமை தாங்கினால் போதும், அதுவும் அரசாங்கத்திற்கு ஜால்ரா போட்டால் போதும், அரசாங்க சார்புடைய வங்கியில் இருந்து 50 கோடி எளிய முறையில் கிடைத்து விடும். பாவம் அப்பாவி வாடகை கார் ஓட்டுனர்கள் பலபேரை பத்து மலையில் நம்ப வைத்து, இன்னும் கண்ணுலே எதையும் காணாமல் பத்திரிகையில் புலம்புகிறார்கள். இந்த வர்த்தக தலைவர் எதையாச்சும் பேசி திசை திருப்பினால் தன் மீது உள்ள கரை மறைக்க படும் என்று நினைக்கிறார் .