அவர்கள் இப்போது தகவலைச் சொன்ன தாய் மீது பாய்கின்றனர்

noh“உண்மையை வெளிப்படுத்தியவர்கள் மருட்டப்படுகின்றனர், மன்னிப்புக்  கேட்குமாறு வற்புறுத்தப்படுகின்றது. அதே வேளையில் தவறு செய்தவர்கள்  பாதுகாக்கப்படுகின்றனர். ஹீரோக்கள் என புகழப்படுகின்றனர்”

சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை  தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரியுங்கள்

ஏரியஸ்46: அந்த ‘குளியலறை கேண்டீன்’ விவகாரத்தில் சிலாங்கூர்
அம்னோவுக்கும் அதன் தலைவர் நோ ஒமாருக்கும் எது நியாயம் என்பதே  தெரியவில்லை. தகவல்களை வெளியிட்டவர்கள் தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ்  விசாரிக்கப்பட வேண்டும் என அவர் சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது.

குளியலறையில் உணவு உட்கொள்வதால் தமது புதல்விக்கு ஏற்படக் கூடிய உடல்  ஆரோக்கிய கேடுகள் பற்றிய கவலையை அந்தத் தாய் ஏற்கனவே பள்ளிக்கூட  அதிகாரிகளிடம் செய்த புகாருக்குப் பலன் இல்லாததால் அவர் சமூக ஊடகங்களை  நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் இனம், சமயம் என்ற அம்சமே இல்லை என அந்தத் தாய்
தெளிவுபடுத்தியுள்ளார். கல்வி அமைச்சு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட  மாணவர்கள் வழக்கமான கேண்டீனைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது, புகார்  எவ்வளவு கடுமையானது என்பதை உணர்த்துகின்றது.

அவர் அதனைச் செய்திருக்கா விட்டால் தலைமை ஆசிரியருடைய உணர்ச்சியற்ற  முடிவு மாணவர்களுடைய ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கும். அரசு ஊழியருக்கு  எதிரான புகார் எப்போது தேசநிந்தனையானது என்பதை நோ சொல்ல வேண்டும்.

பல இனம்: தகவல்களை வெளியிட்டவர் இப்போது ஹீரோ. சிலாங்கூர் அம்னோ  அந்த அறிக்கை மூலம் சிலாங்கூரை கைப்பற்றக் கூடிய வாய்ப்பை புதைத்து  விட்டது.

அது எவ்வளவு முட்டாள் என்பதை அது உணர்த்துகின்றது. குளியலறையில்  மாணவர்களை உணவு உட்கொள்ளுமாறு செய்தது தவறாகும். நீங்கள் எந்தக்  கோணத்தில் பார்த்தாலும் அது தவறு தான். நல்ல சிந்தனையுள்ள யாரும்  அதனைச் செய்ய மாட்டார்கள்.

ஜெஸி43: நோ ஒமார் அவர்களே, அந்தக் கேண்டீனை 500 பேர் பயன்படுத்த  இயலும் போது ஏன் அந்த 29 மாணவர்கள் மட்டும் சாப்பிட முடியாது என்பதைத்  தயவு செய்து விளக்குங்கள்.

ஆசிரியர் கேண்டீனின் கண்ணாடிக் கதவுகளை மாற்றுவதற்கு அந்தக் கேண்டீன்  ஏன் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டது ? இரண்டாவது கல்வித் துணை அமைச்சர்  பி கமலநாதன் பள்ளிக்கூடத்துக்கு வந்த பின்னர் கேண்டீனை பிள்ளைகள் மீண்டும்  எப்படிப் பயன்படுத்த முடிந்தது ?

சூழ்நிலையை மோசமாக்குவதற்கு முன்னர் அந்தக் கேள்விகளுக்கு நியாயமான  பதில்களைச் சொல்லுங்கள். இன்னொரு நாட்டில் கேண்டீன் இருந்தும்  குளியலறையில் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால் நீங்கள் மகிழ்ச்சி  அடைவீர்களா ?

சிவிக்: உண்மையாகச் சொல்கிறேன். ஏதோ திரைப்படத்தைப் பார்ப்பதைப் போன்ற  எண்ணம் அப்போது ஏற்பட்டது. திரைப்படங்களில் தான் இது போன்ற  அபத்தங்களைக் காணலாம்.

உண்மையை வெளிப்படுத்தியவர்கள் மருட்டப்படுகின்றனர், மன்னிப்புக் கேட்குமாறு  வற்புறுத்தப்படுகின்றது. அதே வேளையில் தவறு செய்தவர்கள்  பாதுகாக்கப்படுகின்றனர். ஹீரோக்கள் என புகழப்படுகின்றனர்.

பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோ கேட்டுக் கொள்வது  தான் தேசநிந்தனையாகும்.

பொறுக்க முடியவில்லை: தமது புதல்வியின் நலன் பற்றிக் கவலைப்படும் தாயை  அந்த பெரிய மனிதர் மிரட்டுகிறார். அவர் பெரிய ஹீரோ தான்.

அடையாளம் இல்லாதவன்#40538199: குளியலறையில் மாணவர்கள் உணவு  உட்கொள்ள அனுமதித்த முடிவை ஆதரிக்கும் அனைவரும் தங்கள்  குளியலறையில் குடும்பத்துடன் உணவு உட்கொள்வதோடு உணவு அறையில்  குளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

 

TAGS: