டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் என்னும் சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதம் டிஏபி தலைமையகத்தில் நேற்று மாலை மணி 5 வாக்கில் நேரடியாகக் கொடுக்கப்பட்டது என அதன் அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
அந்தக் கடிதத்தில் ஆர்ஒஎஸ்-ஸின் முதுநிலை உதவி இயக்குநர் டெஸ்மண்ட் தாஸ் கையெழுத்திட்டுள்ளார்.
ஆர்ஒஎஸ்-ஸின் ‘சிறிய கடிதத்தை’ பார்த்ததும் அந்த ஆணை அரசியல் நோக்கம் கொண்டது என்ற டிஏபி அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது என கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.
“டிஏபி விளக்கங்களில் மனநிறைவு கொள்ளவில்லை என்று மட்டும் ஜுலை 30ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆர்ஒஎஸ் முடிவுக்கான காரணங்கள் ஏதும் அதில் இல்லை,” என்றும் லிம் சொன்னார்.
“ஆர்ஒஎஸ் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என்றும் அதிகாரத்தை அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.