பள்ளிக்கூடங்களில் இனவாதம்-அதற்கு முக்கியக் காரணம் அம்னோவே

Raceஇது பெரிய பனிப்பறையின் நுனியைப் போலத் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில்  நிலவும் இனப்பாகுபாடு பற்றிய பல சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை”

‘Balik India, china’  எனச் சொன்னதை தலைமை ஆசிரியை ஒப்புக் கொள்கிறார்

ஒடின்: நான் சீனனும் அல்ல இந்தியனும் அல்ல. ஆனால் அந்த இரண்டு  வம்சாவளி மக்களும் நடத்தப்படும் விதம் எனக்கு மிகுந்த வெறுப்பைத் தந்துள்ளது.

மலாய் மாணவர்களை இந்தோனிசியாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு அலாம் மெகா  தேசிய இடைநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் உண்மையிலே சொன்னாரா  என்பது சந்தேகமாக இருக்கிறது.

என்றாலும் அவரை மன்னிப்பது தான் நல்லது என நான் எண்ணுகிறேன்.
எல்லோரும் அவரை விட மேலானவர்கள் என்பதை அவர் உணர அது உதவும்.

அவருடைய வளர்ப்பையும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சி  தொடக்கம் ஊழல் அரசாங்கம் பின்பற்றிய வெறுக்கத்தக்க நடைமுறைகளையுமே  குற்றம் சொல்ல வேண்டும். கல்வி அமைச்சருமான துணைப் பிரதமர் முஹைடின் யாசினால் பிரச்னை
பெரிதாகியது. இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாதார்  வமானப்படுத்துவதாகச்  சொல்லும் அவர், பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, முன்னாள் சிலாங்கூர்  பாஸ் ஆணையாளர் ஹசான் அலி ஆகியோருடைய நடவடிக்கைகள் பற்றிக் கருத்துரைப்பதே இல்லை.

இத்தகைய போக்கை ஒழிப்பதற்கு ஒரே வழி அம்னோ பாருவை புதைப்பது தான்.  அது எந்த வகையிலும் மறு வடிவம் பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

ஏரியஸ்46: மன்னிப்புக் கேட்பது மட்டும் போதாது. காரணம் சேதம்
ஏற்படுத்தப்பட்டு விட்டது. மலாய் மாணவர்கள் முன்னிலையில் அவர் மலாய்க்காரர்  அல்லாத மாணவர்களை சிறுமைப்படுத்தியுள்ளார். அது மிகவும் கடுமையானது.

அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வு செய்த வார்த்தைகள் மலாய்க்காரர் அல்லாத  மாணவர்கள் தகுதி, குடியுரிமை அடிப்படையில் குறைந்தவர்கள் எனச்  சொல்வதற்குச் சமமாகும்.

ஏதுமறியாத மாணவர்களுடைய நாட்டுப் பற்றுப் பெருமைக்கு கடும் அடி
கிடைத்துள்ளது. மலாய் நண்பர்கள் முன்னிலையில் அவர்களிடம் தாழ்வு  மனப்பான்மையை அது ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய இனம்: “நான் வருந்துகிறேன்” என அந்தத் தலைமை ஆசிரியை  சொன்னது சரியான நடவடிக்கை ஆகும். அவர் மீண்டும் அதனைச் சொல்ல  மாட்டார் என நம்புவோம். ‘தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வ  குணம்,” என்பது முதுமொழியாகும்.

ஏஜே: அது அம்பலமான பின்னரே அவர் வருந்துவதாகச் சொல்கிறார். அது  சரியல்ல.

இது பெரிய பனிப்பறையின் நுனியைப் போலத் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில்  நிலவும் இனப்பாகுபாடு பற்றிய பல சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை.

அதனைக் கட்டுப்படுத்த முழுமையான ஒருமித்த முயற்சிகள் தேவை.

எஸ்ஆர்மான்: நாம் அனைவரும் இந்தோனிசியாவுக்கும் சீனாவுக்கும்
இந்தியாவுக்கும் திரும்பிச் சென்று விட்டால் யார் இங்கு இருப்பார்கள் ? நம்  நாட்டை இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மியன்மார் மக்களும் எடுத்துக்  கொள்வார்களா ?

பில்ஸ்டர்: மலாய், இந்திய ரத்தக் கலப்பைக் கொண்ட சீனனாக நான் இருந்தால்  நான் எங்கே போவது ? இந்தோனிசியாவுக்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மாறி  மாறிச் செல்ல வேண்டுமா ?

TAGS: