வேதமூர்த்தி சூளுரை: நான் தோல்வி கண்டால் பதவி விலகுவேன்

பிஎன் -உடன் ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வுப் பத்திரத்தில்  கூறப்பட்டுள்ளது போல தமது கடமைகளை செய்ய முடியாது போனால் தமது  பதவியிலிருந்து விலகுவதற்குத் தாம் ‘தயாராக’ இருப்பதாக துணை அமைச்சர் பி  வேதமூர்த்தி சொல்கிறார்.

waythaமலேசியாவில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப்  ‘பங்காற்ற முடியாது’ என தாம் உணர்ந்தால் தமது இப்போதைய பதவியில் ‘ஒரு  நிமிடம் கூட’ இருக்கப் போவதில்லை என செனட்டருமான அவர் இன்று ஒர்  அறிக்கையில் தெரிவித்தார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது பொருளாதார உருமாற்றத் திட்டத்துக்கு ஏற்ப  மலேசிய இந்திய சமூகத்தை பாதித்துள்ள நீண்ட கால, சிக்கலான பிரச்னைகளைக்  கவனித்து அவற்றை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு அவர் என்னை நியமித்துள்ளார்,”  என்றார் அவர்.

கடந்த ஏப்ரல் மாதம் பிஎன் -னும் ஹிண்ட்ராப்பும் அந்த புரிந்துணர்வுப்
பத்திரத்தில் கைஎழுத்திட்டன. ஹிண்ட்ராப்புடன் இணைந்து நான்கு முக்கியமான  துறைகளில் இந்தியர்களுடைய நலன்களை மேம்படுத்த நஜிப் தலைமை தாங்கும்  பிஎன் அப்போது வாக்குறுதி அளித்தது.

 

TAGS: