டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி ஆணையிட்டுள்ளது அம்னோ பிரச்சாரத்தில் ஒர் அங்கமா என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வினவியுள்ளார்.
ஆர்ஒஎஸ் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆணையிட்டதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. ஆனால் அம்னோ ஏடான உத்துசான் மலேசியா அதற்குக் காரணம் கூறியுள்ளது- கடந்த ஆண்டு பினாங்கு டிஏபி பேரவையில் 547 ஆவி வாக்காளர்கள் பங்கு கொண்டதாக அது சொல்லிக் கொள்வதை லிம் சுட்டிக்காட்டினார்.
அந்த 547 ‘ஆவி’ பேராளர்களும் பினாங்கிலிருந்து சென்றவர்கள் என அது
அப்பட்டமான வெறுக்கத்தக்க பொய்யாகும் என்றும் அம்னோ/பிஎன்
மனோதத்துவப் போர் பத்திரிக்கையாளர்கள் அதனை ஜோடித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
‘ஆவி பேராளர்கள்’ குறித்து நேற்று உத்துசான் மலேசியாவில் அவாங் செலாமாட் எழுதியுள்ளது பற்றி லிம் கருத்துரைத்தார்.
ஆர்ஒஎஸ் நியாயமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணத்தை தெரிவித்தால் மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த டிஏபி தயாராக உள்ளது. ஆனால் அம்னோ/பிஎன் ஜோடிக்கும் பொய்கள் அடிப்படையில் அல்ல என்றும் அவர் சொன்னார்.
எப்படியோ இனவெறி சீனன் இல்லாமல் போவது நல்லதுதான் உம்நோவும் dap யும் அழிந்தால் நாட்டில் இன வெறி அழியும்