-மு. குலசேகரன், ஆகஸ்ட் 3, 2013.
இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசனில் வழங்கப்பட்ட வாய்புக்களை நிராகரித்ததனால்தான் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் இன்று ஆங்கிலப் முபத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.
மெட்ரிகுலேசன் இடம் கிடைத்து அதை சில பேர் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்திய மாணவர்கள் அந்த வாய்பினை ஒதுக்கக் கூடிய சாத்தியமில்லை. ஏனெனில் 20 முதல் 30 ஆயிரம் வெள்ளி வரைக் கொடுத்து பவுன்டேஷன் அல்லது A லெவல் படிப்பில் சேர்த்து தங்களின் பிள்ளகளை படிக்க வைக்க பெரும்பாலான இந்தியப் பெற்றோர்களுக்கு வசதியில்லை என்பதை கமலநாதன் உட்பட நாடே அறியும்!
1500 இடங்கள் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சரே நாடளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். ஆனால் கமலநாதனோ, அப்படி இல்லை கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொன்னது பொய், நான் இப்பொழுது சொல்வதுதான் உண்மை என்று பொருள்படும்படியாக, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தம் 1500 இடங்களில் முதல் நுழைவில் 892 மாணவர்கள் மட்டுமே பதிந்தார்கள். இரண்டாவதாக 350 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருகின்றோம் என்று கூறுகிறார்.
1500 இடங்களில் 892 இடங்கள் போனால் மீதமுள்ள 608 இடங்களுக்கு மாணவர்களை அழைக்காமல் ஏன் வெறும் 350 இடங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தீர்கள் என்ற என்னுடையே முந்தைய கேள்விக்கே இன்னும் பதில் கூறாத கமலநாதன் இன்று புதிதாக செய்தி சொல்வது போல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றார்.
2012/2013 மாணவர் சேர்க்கையில் 2096 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் அதில் 1170 மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், 2013/14 சேர்க்கையில் 1,850 மாணவர்கள் அழைக்கப்பட்டதாவும் அதில் 1,142 மாணவர்கள் மட்டுமே அழைப்பை ஏற்றார்கள் என்றும் கூறுகிறார். இந்தத் தகவலை அவரால் எந்த ஒரு சமயத்திலும் நிரூபிக்க முடியவில்லை. அவர் சொல்வது உண்மையென்றால், அவரும் மலேசிய இந்தியக் கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் திருவேங்கடமும் சேர்ந்து தயாரித்த மெட்ரிகுலேசனில் நுழைய முழு தகுதி பெற்ற இந்திய மாணவர்களின் பட்டியல் என்னவாயிற்று?
அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 350 மாணவர்களில் ஒருவருக்குக்கூட மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது துணக் கல்வி அமைச்சருக்கு தெரிந்திருந்தும் ஏன் இது போன்ற மக்களை ஏமாற்றும் செய்தியை வெளியிட்டுள்ளார்?
அந்தப் பட்டியலை கல்வி அமைச்சர் முகைதினும் அமைச்சின் அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பும் தெரிவித்ததையும் அவர் அறிவார்.
சவாலை ஏற்கத் தயாரா?
அந்த 350 மாணவர்கள் அனைவருக்குமே இடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், 1,500 என்ற இலக்கை எட்டி இருக்கலாமே? அதை நிறைவேற்ற கமலாநாதனுக்கு ஏன் வக்கு இல்லாமல் போயிற்று ?
பொது விவாத்திற்கு வந்து தன் கூற்று உண்மை என்பதனை நிரூபிக்க கமலநாதன் முன் வருவார ? அவருடன் விவாதிக்க திருவேங்கடமும் தயாராக இருக்கின்றார் என்பதனை இதன் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி துணைக் கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் பாரபட்சமற்ற நடத்தையை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி என்னைப் போன்றவர்களின் முகத்தில் கரி பூசவேண்டும்? இந்தச் சவாலை ஏற்கும் தைரியம் கமலநாதனுக்கு உண்டா?
தூங்குபனை சுலபமாக எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது கடினம் என்று சொல்வது போல, கமலாநாதன் தான் விடுக்கும் அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பான்மையானவை என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அரசியலில் நிலைப்பதற்காகவும் தன் முதலாளி முகைதினின் அனுக்கிரகம் வேண்டியும், மீண்டும் மீண்டும் சொன்ன பொய்களையே சொல்லும் இயல்புடைய மனிதராக இருக்கிறார். இந்தத் துணை மந்திரியை அந்த கல்விக்கு அதிபதியான சரஸ்வதிதேவியும் மன்னிக்கமாட்டாள்.
நோன்பு பெருநாள் முடிந்து மாணவர்கள் முதல் தவணைப் பரீட்சைக்கு தயாராகிக் கொன்டிருக்கும் இவ்வேளையில் மூன்றாவது நுழைவுக்கு கமலநாதன் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றாரம். இதையும் நாம் நம்ப வேண்டுமாம். இன்னும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்?
ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி கொடுத்து அதிகமான வாசகர்களுக்கு தெரியும்படியாக செய்து அதன் மூலம் இந்தியர்களுக்கு அரசாங்கம் பாரபட்சம் காட்டவில்லை, இந்திய மாணவர்கள்தான் அதற்கு முழுக்காரணம் என்றெல்லாம் சொல்லி உண்மையை மூடிமறைக்க முயற்சிக்க வேண்டாமென கமலநாதனை கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வண்ட வாளங்கள் தண்ட வாளத்தில் ஏறி நாளாகின்றன. ஆகவே இந்த அரை காசுக்கு பிரயோஜனமில்லாத செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவதாக எண்ணி தாங்கள் குழம்ப வேண்டாம். மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார்கள்.
மெட்ரிகுலேசன் விவகாரத்தை இதோடு மூடிவிட்டு வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
கடுப்பாய் போன பழைய கத,,,,UM இந்தியன் பகுதியே வட போச்சி
கதையா சுட்டுடாணுங்க! 2013- 2025 கல்வி நீல நிற மேகங்களை பார்க்கவும் அங்கே ஒரு கருப்பு புகை மண்டலம் உண்டு.
இதனையே எல்லா தமிழ்ப் பத்திரிக்கைகளையும் கூப்பிட்டு இந்த செய்தியினை வெளியிட்டு இருக்கலாமே! கமலநாதன் இந்தியர்களுக்கு ஒரு செய்தியும் இந்தியர் அல்லாதாருக்கு ஒரு செய்தியும் வைத்துக்கொண்டு பொம்மலாட்டம் ஆடுகிறார்! எல்லா ஆட்டங்களும் கொஞ்ச நாள்களில் ஆடி அடங்கி விடும்! இனத் துரோகிகளை வேரறுக்க வேண்டும்!
இது ஒன்னும் புதிதல்ல, தெரிந்த விசியம்தான்… சரி சரி விடுங்க நம் பிள்ளைகளை வெளிநாட்டில் அனுப்பி படிக்க வையுங்க, நம் பிள்ளைகளுக்காக பெற்றோர் ஆகிய நாம் உயிரை கொடுப்போம், நேற்று தோன்றிய இந்த இனத்துக்கு எவ்வளவு திமிர் இருக்குன்னா உலகம் தோன்றாத முன்னுக்கு தோன்றிய தமிழ் இனத்துக்கு (உலகம் தோன்றாத முன்னுக்கு தோன்றியது தமிழ் இனம்! உலகில் முதல் இனமே தமிழ் இனம்) எவ்வளவு திமிர் இருக்கும், போங்கடா… போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிரந்தரமா வாழ்ந்தது யாரடா?
மனம் கலங்கி சொல்லுகிறேன் தமிழ் இனத்தை நினைத்து கலங்காத நாள் இல்லை ,கண்ணீர் விட்டு அலுத்து இருக்கிறேன் ,,அதனால் தான் கருத்து எழுதும் பொழுது கொஞ்சம் கொச்சை வார்த்தையும் சேர்த்து எழுதுகிறேன் ,,மன்னிக்கவும் ,செம்பருத்தி நல்ல இதழ் ,,தப்பான எனக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறது ,, செம்பருத்திக்கு எனது நன்றி ,,,
கமலநாதன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என நினைத்து பேசவேண்டாம்.. உன்னை போல மற்றவர்களையும் முட்டாளாக நினைக்காதே.
காப்பாரில் 13வது பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நஜிப் கொடுத்த வாக்குறுதிதான் 1500 மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு! இதை நம்பி ம இ கா மற்றும் ‘வேதா ஹிண்ட்ராப்” IPF, PPP போன்ற ஜால்ரா கட்சிகள் இந்தியரின் வாக்குகளை பாரிசானுக்கு ஆதரவு திரட்டின, கடைசியாக வைத்தான் முஹிடின் யாசின் ஆப்பு!
கமலநாதன் எமனுக்கே கதை சொல்லக்கூடியவர்.மலேசியர்களுக்கு, அதுவும் இந்தியர்களுக்கு பல்வேறு சமயங்களின் நாசுக்காக காதில் பூ சுற்றியவர் ஆச்சே இப்போதும் சொல்லுவார் இன்னும் 4 வருடமும் சொல்லுவார்.நாம் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.
கமலநாதன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என நினைத்து பேசவேண்டாம்.. உன்னை போல மற்றவர்களையும் முட்டாளாக நினைக்காதே.
சிலர் எழுதுவதை படிக்கும்பொழுது மனம் கனக்கிறது.காரணம் நாம் நம் சமுதாயம் உரிமையை மட்டும் கேட்பதாக நினைகிறார்கள்.நமது நோக்கம் அதுமட்டுமல்ல.எதிர் வரும் காலங்களில் நம் சமுதாயம் இன் நாட்டில் உரிமையுடன் வாழ வேண்டுமானால் கண்டிப்பாக இன் நிலையை நாம் எடுத்தே ஆகவேண்டும். பல நாடுகளில் நம் இன சிதைவிற்கு இத் தவறே காரணம்.மியன்மாரில் தமிழர்களின் நிலை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
சரி விடுங்க அரசியலிலே இதெல்லாம் சகஜம்மப்பா, இளிச்சவாய் இந்தியர்கள் இருக்கும்வரை சுலபமாக காதில் பூ சுற்றலாம். அடுத்த தேர்தல் வரை கமலனாதனக்கு பொழுது போகவேண்டாமா?
கமலநாதன் அழகான பெயர், ஆனால் நாற்றம் பிடித்த ஆள்.
பொய் …பொய்…பொய்….பொய்…! பொய்யன் என்ற பெயர் பொருத்தம் !
மக்கள் மடையர்கள்
இல்லை
எல்லா வாட்ரையும்
பார்த்து கிண்டு
இருக்கீறார்கள்
நாம் முட்டாளாக இருக்கலாம்,அது நமது விருப்பம் ஆனால் மற்றவர்கலை முட்டாளாக ஆக்க நினைப்பது அதி முட்டாள்தனம்,மறந்து விடாதிர்கள் சுயநல வாதிகளே/பதவி பித்தர்களே.
வேதமூர்த்தி சம்பு லிங்கம் போன்றோர் இன்னும் சமுதாயத்தை ஏமாற்ற வேண்டாம் \என் கேட்டுக் கொள்கிறேன்.
சென்ற ம இ க பேராளர் மாநாட்டிலேயே ஜிப் அவர்கள் கண்டிப்பாக 1500 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு கொடுக்கபட்டது இனிமேலும் 1500 இடங்கள் கொடுக்க படும் என்று பல தலைவர்கள் முன்னிலையில் கூறினார் , பார்க்க வேண்டுமே பலத்த கைதட்டலை மான்க மடயனுக்கல் இன்று நம்ம நிலைமையை பாரு தைரியமாக கேட்க வேண்டியது தானே ஏன் அத்தனை பேரும் வாயை முடிக்கொண்டிரிகிரிர் (சொன்ன சொல்லு என்ன ஆச்சி ஜிப் )
இன்று கமலநாதனின் குப்பை பேட்டி முழு பக்க விளம்பரமாக வந்துள்ளது. விளம்பரம் போட்டு செய்தி சொல்லும் அளவிற்கு கல்வி அமைச்சு வியாபாரமாகிவிட்டது.கமலநாதன் குழப்பி PRO போர் BN ?
பொன் ரங்கன், அது பேட்டி அல்ல! பணம் கொடுத்துப் போடப்பட்ட ஒரு விளம்பரம். இனி இவர் சரவணன் போன்றோர் விளம்பரம் கொடுத்து தங்களது சேவைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டும். அப்படியும் அதை யார் நம்பப் போகிறார்கள்!
நமது கல்வி வளத்தை மேம்படுத்த கல்வி அமைச்சர் கமலநாதன் கல்வி குழு அமைத்து விட்டார் இனி என்ன வெற்றி மேல் வெற்றிதான்? அறிஞர் பெருமக்களும் , கல்வி மான்களும் அந்த குழுவில் இருப்பதால் மேட்ரிகுலோசன் என்னய்யா? முகைதீன் காலில் விழுந்து முத்தம் கொடுத்தாவது நமது கல்வியின் திட்டத்தை உச்சாணி கொம்பில் உயர்த்தி விடுவார் பாருங்களேன்!
நம் மாணவர்கள் ஒரு வருடத்தில் இந்த மெட்ரிகுலேசன் படிப்பை முடிக்க வேண்டும். ஆனால் அவர்களோ இரு வருடத்தில் படித்து முடிக்கலாம். அந்த ஒரு வருடத்திலும் மீதி இருப்பதோ 8 மாதங்கள். எந்த பிள்ளைகளும் பாஸ் பண்ண முடியாத ஒன்று. இவங்கள் போடற பிச்சை யாருக்கு வேண்டும்.கடன் பட்டாவது என் பிள்ளைகளை என்னால் படிக்க வைக்க முடியும். போங்கடா நீங்களும் உங்க…..
அரசாங்க பதவி கிடைத்தவுடன் பொம்மலாட்டம் ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். அவன் ஆட்டுவிக்கிறான் இவன் ஆடுறான். பொய் பித்தலாட்டம் எல்லாம் அரங்கேறி பாரிசான் புத்தி வெளிப்படுகிறது. 5 வருட வாய்ப்புதான். நன்னா பயன்படுத்திக்கிங்கோ. ஏன்னா நாம் சொல்றது?
பீ கமலநாதனை போல் அம்னோ ஜால்ராக்கள் இருக்கும்வரை நம் இனம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. தானும் தன குடும்பமும் வளமாக இருக்க எந்த துரோகத்தையும் செய்வானுங்க இந்த பச்சோந்திகள். இந்தியர்களின் பிரச்சனைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று கிளம்பிய வேதமுர்த்தி எங்கயா போன ?
Vanakkam YB Kamalanathan (YB)
The SPM students apply for Matriculation using their trial exam results end of October/November. These are the students were selected upon actual SPM results released in March following year. Thus, the Education Ministry have full disclosure of the details. Our suggestion is YB should form a special task force to obtain all the details of the Indian student prior to actual SPM results release date. Once the SPM results is released, just need to match the student and inform them weather accepted or rejected, upload all the selected student list and give them time frame to accept or reject. subsequently, if places are available (rejected by students), upload the next best student list. If YB lack of manpower, let the Indian NGO to help on this matter. The reason why many student reject the second and 3rd intake is because, they will not be able to catch up with studies, in some cases, one semester is over. Lets work together to achieve our goal. Our goal is: all the 1,500 seat allocated for Indians to be filled within the first intake itself. YB to appoint a team from ministry, MIC and NGO’s to form a task force to settle amicably. When there is a Will there is a Way. YB, you can do it! make it happen for the next intake.
அருமையான போராளி மு. குலசேகரன்..! எனக்குத் தெரிந்தவரைக்கும் நம் இந்தியர்களுக்காக முடிந்த வரை போராடி.. கொண்டுதான் இருக்கிறார்..! இவர் பெருமைகுரிவரே…!