“குற்றச் சக்திகள் அங்குமிங்கும் ஒடிக் கொண்டு மக்களைச் சுடுகின்றனர். தனக்கு அவசர காலச் சட்டம் தேவை என அரச மலேசியப் போலீஸ் படை சொல்கிறது. என்றாலும் அம்னோவை எதிர்க்கின்றவர்களை அச்சுறுத்துவதற்கு அது தனது வளங்களில் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றது”
சுவாராம் ஸ்கார்ப்பின் மீது ‘இரண்டாம் சுற்று’ மருட்டலை எதிர்நோக்குகிறது
ஸ்பிக்கரினி: சுவாராமுக்கு நான் சொல்வது இது தான். அம்னோ மற்றும் அதன் சேவகர்களுடைய அச்சுறுத்தல் மக்களுக்கும் சுவாராமுக்கும் பழகிப் போய் விட்டது. ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழலில் உண்மையை வெளிக்கொணர நடத்தும் போராட்டத்தை சுவாராம் கைவிடக் கூடாது. உண்மையாக இருக்கும் வரையில்
பொய்களை வெற்றி கொள்ள முடியும்.
வரும் அம்னோ பொதுப் பேரவை காரணமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு விவகாரத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ள முயலுகிறார். தலைவர் பதவிக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட சிலர் விரும்பக் கூடும். அம்னோ சிதறுவதைக் காண ஆர்வமாக உள்ளது.
கேஜே ஜான்: (சுவாராம் செயலக உறுப்பினர்) சிந்தியா கேப்ரியல், திறமையற்ற போலீஸ் படையின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச வேண்டாம். குற்றத்தை சொல்லச் சொல்லுங்கள். விசாரிப்பதற்கு போலீசுக்கு உரிமை உள்ளது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. சுவாராம் என்ன குற்றம் செய்தது ? சங்கப் பதிவதிகாரி தானே
குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டும். ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் சட்ட விரோதமாக இருந்தால் தவிர போலீசுக்கு அங்கு என்ன வேலை ?
அடையாளம் இல்லாதவன்#74021261: உண்மையில் எல்லாம் சூடாகிக் கொண்டிருக்கிறது. பிரஞ்சுப் பிரதமர் அண்மையில் கோலாலம்பூருக்கு வந்து சென்றுள்ளார். நமது பிரதமரும் அவரும் என்ன பேசிக் கொண்டார்கள் ? இப்போது முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் பிரான்ஸுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும் சிந்தியா
மனம் தளரக் கூடாது. மக்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
புருஷோத்தமன்: அம்னோ தேர்தலுக்கு முன்னர் மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக இது போன்ற அச்சுறுத்தல்கள் தொடரும். விவேகமான மலேசியர்களாகிய நாங்கள் இது போன்ற நாடகங்களை மீண்டும் மீண்டும் பார்த்து சலித்து விட்டோம். நாங்கள் இது போன்ற கதைகளை நம்பப் போவதில்லை. வாய்மை வெல்லும். இது போன்ற அரசியல் விளையட்டுக்கள் சிறிது காலத்துக்கு
மட்டுமே.
நீதிபதிபாவ்: குற்றச் சக்திகள் அங்குமிங்கும் ஒடிக் கொண்டு மக்களைச்
சுடுகின்றனர். தனக்கு அவசர காலச் சட்டம் தேவை என அரச மலேசியப்
போலீஸ் படை சொல்கிறது. என்றாலும் அம்னோவை எதிர்க்கின்றவர்களை அச்சுறுத்துவதற்கு அது தனது வளங்களில் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றது”
ஜெரோனிமோ: கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைகாரர்கள் தங்கள் விருப்பம் போல செயல்படுகின்றனர். அதே வேளையில் தவறு செய்தவர்களை நமது போலீஸ் படை பாதுகாக்கின்றது. அது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? போலீஸ் படை நமது நலன்களைப் பாதுகாக்காமல் தனது அரசியல் எஜமானர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதைப் பார்க்கும் போது அதற்குச் சம்பளம் கொடுக்க நான்
ஏன் வரிப் பணம் செலுத்த வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
சுவாராமை ஒடுக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால்
புலனாய்வுகளும் நீதிமன்ற வழக்கும் பாரிஸில் நடப்பதை மறக்க வேண்டாம். வெகு விரைவில் குற்றம் செய்தவர்களும் அவர்களுடைய சேவகர்களும் அனைத்துலக ரீதியில் தேடப்படும் நபர்களாகப் போகின்றனர். நீங்கள் ஒடலாம். ஆனால் நீதியிலிருந்து தப்பிக்க முடியாது.
நியாயமானவன்: சுவாராம் உறுப்பினர்களும் அவர்களுக்கு உதவுகின்றவர்களும் நீதிக்கும் நியாயத்திற்கும் போராடும் வீரர்கள். சுவாராமை எதிர்க்கின்றவர்கள் கறை படிந்தவர்கள். இறுதியில் நன்மை தீயதை வெல்லும்.
படாவி காலத்திலிருந்து மலேசியா ஒரு பாதுகாப்பான நாடு என்று பட்டியலில் இருந்து விடுபட்டு கொண்டே போகிறேதே .. தினம் ஒரு கொலை . பல கொள்ளை சம்பவங்கள் வழிப்பறி சம்பவங்கள் .மதத்தின் பெயரால் தப்பு செய்பவர்களுக்கு பாதுகாப்பு .. கடவுளே ……
இந்த லட்சணத்தில் அதி நவீன காமிரா வேண்டுமாம்?
அதிகாரத்தில் உள்ள அம்னோகாரன்கள் இதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை…அதிலும் இந்நாடு எக்கேடுகெட்டாலும் அவன்களுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை. அவன்களின் வங்கிகளில் கணக்கு கூடிகொண்டே போகும்வரையில் எதற்கும் மசியமாட்டான்கள் .