முஹைடின்: முஸ்லிம் அல்லாதார் என நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை

muhiaddinதுணைப் பிரதமர் முஹைடின் யாசின், பரவலாக வெளியிடப்பட்டுள்ள தமது ஜுலை  30ம் தேதி சொற்பொழிவில் அண்மைய காலமாக முஸ்லிம் அல்லாதார்  இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்து கேலி செய்வதாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை  எனக் கூறிக் கொண்டுள்ளார்.

தாம் பொதுவான அறிக்கையை மட்டுமே விடுத்ததாக பெர்னாமா வழி
வெளியிட்டுள்ள விளக்கத்தில் முஹைடின் தெரிவித்தார்.

“சில தரப்புக்கள் அண்மைய காலமாக நமது சமயத்தை சிறுமைப்படுத்தி கேலி  செய்து வருகின்றன. மற்ற இஸ்லாமிய நாடுகளில் நிகழ்வதைப் போன்ற பதற்ற  நிலை ஏற்படாமல் இருக்க அது தொடராது என நம்புகிறேன்,” என முஹைடின்  ஜுலை 30 நிகழ்வில் சொன்னதாக பெர்னாமாவின் விளக்கச் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.

அதே சொற்பொழிவில் நாய் பயிற்றுநர் நோன்புப் பெரு நாள் வாழ்த்துச் செய்தி  குறித்து பேசியதாக சொல்லப்படுவதையும் முஹைடின் நிராகரித்தார்.

நாய் பயிற்றுநரைச் சித்தரிக்கும் அந்த காணொளிப் பதிவு பற்றி முஹைடின்  குறிப்பிட்டார் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடும் சின் சியூ நாளேடும்  செய்தி வெளியிட்டிருந்தன.

முஹைடின் அவசரப்பட்டு அந்த காணொளிப் பதிவுக்குப் பின்னணியில் முஸ்லிம்  அல்லாத ஒருவர் இருப்பதாக கூறிக் கொண்ட அவரது உரையை பலர்  கண்டித்துள்ளனர்.

அந்த நாய் பயிற்றுநர் மஸ்னா யூசோப் என்னும் முஸ்லிம் மாது என்பது பின்னர்  தெரிய வந்தது. அவரைத் தற்போது போலீஸ் விசாரித்து வருகின்றது.

 

TAGS: