பலவீனமான அரசாங்கத்துக்குத் தான் தடுப்புக் காவல் சட்டம் தேவை

your sayஉலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்க அத்தகைய  சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் நியாயத்திற்கும்  விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதையே அது காட்டுகின்றது’

தடுப்புக் காவல் மீது அம்னோ மகளிர், இளைஞர் பிரிவுகளுக்கு இடையில் கருத்து  வேறுபாடு

ஹோல்டன்: உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்க  அத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் நீண்ட காலமாக  பலவீனமான தலைமைத்துவம் இருந்து வருவதற்கு அது அறிகுறியாகும்.

அரசாங்கம் நியாயத்திற்கும் விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதையே அது  காட்டுகின்றது. தவறுகள் பற்றி கேள்வி எழுப்புகின்றவர்களை ஒடுக்க மலேசியாவில்  அது நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலும் அம்னோவும் 21ம்  நூற்றாண்டில் நாட்டை ஆளும் முறையை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை  நிர்வகிக்கும் மூன்றாம் உலக ஒடுக்குமுறைச் சிந்தனையால் மக்களிடமிருந்து எந்த  அளவுக்கு தாங்கள் விலகியிருப்பதை அவர்கள் அறிவதற்கு அது உதவும்.

ஹோம்சிக்: சில அம்னோ தரப்புக்கள் விசாரணையில்லாத தடுப்புக் காவலை  விரும்புவதற்கு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகும். குற்றச் செயல்களை  எதிர்த்துப் போராடுவதற்கு அல்ல. அந்தச் சட்டம் மீண்டும் அமலாக்கப்பட்டால்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமையும் டிஏபி தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங்-கையும் அவை விருப்பம் போல் ஜெயிலில் போடலாம்.

வெர்சே: குற்றச் செயல்களை ஒடுக்குவதில் நமது போலீஸ் படைக்கு உள்ள  ஆற்றல் மீது ஷாரிஸாட் நம்பிக்கை இழந்து விட்டதாகத் தெரிகிறது. அதனால்  தான் அவர் அவசர காலச் சட்டம் மீண்டும் தேவை என்கிறார். இது நமது  போலீஸுக்கு அவமானமாகும்.

அந்த சட்டத்தைப் பொறுத்த வரையில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி  ஜமாலுதின் நியாயமாகப் பேசுகிறார். அவருக்கு உள்துறை அமைச்சர் பதவியை  குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்க வேண்டும். நமது போலீஸ் படையை அவர்  மாற்றுவதை நாம் காண வேண்டும்.

நியாயம் நீதி: தடுப்புக் காவல் அரசியல் ரீதியில் பயன்படுத்தப்படுவதற்கு வழி  கோலுகின்றது.

கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த அந்தச் சட்டம் முதலில்
இயற்றப்பட்டது. ஆனால் கால ஒட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்க  அது பயன்படுத்தப்படுகின்றது.

இப்போது தேச நிந்தனைச் சட்டம் கூட எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே  பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் பெர்க்காசா தலைவர்களான இப்ராஹிம் அலி,  சுல்கிப்லி நூர்டின், அம்னோ சார்பு உத்துசான் மலேசியா ஆகிய தரப்புக்கள்  மக்களை தொடர்ந்து பிளவுபடுத்துகின்றன.

எஸ்எம்யீ: ஷாரிஸாட் என்ன சொன்னாலும் அது முக்கியமல்ல. ஏனெனில் அவர்  காலத்திற்கு ஒவ்வாதவர் ஆகி விட்டார். உண்மையில் அம்னோ பொருத்தமற்றது.  மசீச-வும் பொருத்தமற்றது. மஇகா செயலிழந்து விட்டது. பிஎன் மூழ்கிக்  கொண்டிருக்கிறது.

விஜய்47: ‘நல்ல போலீஸ் கெட்ட போலீஸ்’ எந்த போலீஸ் படையும் பின்பற்றும்  தந்திரமாகும். ஆனால் கைரி தமது வியூகத்தை சிறிதளவு மாற்றிக் கொண்டு  இரண்டு வேலைகளையும் செய்கிறார்.

கைரி என்றாவது ஒரு நாள் விவேகமான அறிக்கையை வெளியிடுவார். மற்ற  நேரங்களில் அவர் வழக்கமான அம்னோ நோயாளி தான்.

என்றாலும் அவரது அண்மையை அறிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   மலேசியாவுக்குப் புதிய சட்டம் ஏதும் தேவை இல்லை. ஏற்கனவே நிறைய  உள்ளது.

இப்போது தேவைப்படுவது அமலாக்கமே. எடுத்துக்காட்டுக்கு ஊழல் மீது நமக்கு  இன்னொரு சட்டம் தேவையா ? நடப்புச் சட்டங்களை நல்ல முறையில்  அமலாக்கினால் கூட நமது ஜெயில்களில் வெள்ளை முடிக்காரர்கள் நிறைந்திருப்பர்.

 

TAGS: