அவசரப்பட வேண்டாம்; துப்பாக்கிக் குற்றங்களுக்கும் அவசரக் காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதை நிரூபியுங்கள்

guns“அந்தக் கைதிகளின் கைவிரல் ரேகைப் பதிவுகள் உட்பட எல்லாத் தகவல்களும்  போலீசாரிடம் உள்ளன. அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன்  அவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதனை மெய்பிப்பது சுலபம்”

போலீசார்: அவசர காலச் சட்டம் ரத்தான பின்னர் துப்பாக்கிக் குற்றங்கள் கூடியது  ‘தற்செயலானது அல்ல’.

CHKS: அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதற்கும் துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் கூடியதற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சொல்லவே கூடாது.  போலீசார் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதின் மூலம் ஏன் அவர்கள் கடுமையாக  உழைக்கக் கூடாது ? ரோந்துக் கார்களை வாங்க நிறையப் பணம் செலவு  செய்யப்பட்டுள்ளது உண்மை தானே ?

ஆனால் நமது போலீஸ் அதிகாரிகளில் எத்தனை பேர் ரோந்துப் பணிகளில்  ஈடுபடுகின்றனர் என்பதே கேள்வியாகும். அவர்கள் வெறும் அலுவலகப் பணிகளில்  மட்டும் சம்பந்தப்பட்டுள்ளனரா அல்லது சாதாரண குடிமக்களை மிரட்டிக்  கொண்டிருக்கின்றனரா ?

உண்மையில் அவசர காலச் சட்டத்தை பயன்படுத்துவது கிரிமினல்களை  முறியடிப்பதற்கு சோம்பேறித் தனமான வழியாகும்.

505 ராக்யாட்: அவசரப்பட வேண்டாம்; துப்பாக்கிக் குற்றங்களுக்கும் அவசரக்  காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதை நிரூபியுங்கள்.  எத்தனை பேர் முன்னாள் அவசர காலச் சட்ட கைதிகள். அந்தக் கைதிகளின்  கைவிரல் ரேகைப் பதிவுகள் உட்பட எல்லாத் தகவல்களும் போலீசாரிடம்  உள்ளன. அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் அவர்களுக்கு தொடர்பு  இருந்தால் அதனை மெய்பிப்பது சுலபம்.

முக மூடி: “எங்களை நம்புங்கள். புகார் செய்ய வேண்டும். எங்களுக்கு
விசாரணைகளில் உதவுங்கள்”

நீங்கள் வேடிக்கையாகப் பேசுவதாக எண்ணுகிறேன். நாட்டுப் பற்றுடைய  குடிமக்கள் என்ற முறையில் உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக  இருக்கிறோம். ஆனால் அவ்வாறு உதவி செய்கின்றவர்கள், தகவல்களைச்  சொன்னவர்கள் ஆகியோருடைய நிலையைப் பாருங்கள்.

தமது புதல்வர் அல்வின் தான் -உடைய நடவடிக்கைகளுடன் எந்த சம்பந்தமும்  இல்லாத அவரது தாயார் அச்சுறுத்தப்பட்டுள்ளார். முதலில் நம்பிக்கையைப்  பெறுவதற்கு முயலுங்கள். பாகுபாடு காட்டுவதில்லை என்பதைக் காட்டுங்கள்.

நான் மட்டும்: மலேசியர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மலேசியாவில்  குற்றச் செயல்களை போலீசார் முறியடிக்க முடியுமா ? திறமையான மற்றவர்கள்  நமக்குத் தேவையா ? தொழில் நிபுனத்துவம் ஏதும் எஞ்சியுள்ளதா ? அவர்கள்  பொது ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிகின்றது. ஏன்  சாதாரணக் குற்றங்களை ஒழிக்க முடியவில்லை ?

நாங்கள் அதிகமாகக் கேட்கவில்லை. வழிப்பறி திருடர்களையும்
கொள்ளையர்களையும் கட்டுப்படுத்துங்கள். அன்றாடம் நிகழும் துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்களை நிறுத்துங்கள்.

அடையாளம் இல்லாதவன்#14329559: அவசர காலச் சட்டம் ரத்துச்
செய்யப்படுவதற்கு முன்னர் துப்பாக்கிக் குற்றங்கள் குறைவாக இருந்தது என  நீங்கள் சொல்கின்றீர்களா ? போலீசார் தங்கள் விருப்பம் போல எதனையும் மூடி  மறைத்துள்ளனர். ஆனால் இப்போது நாம் எல்லா துப்பாக்கிக் குற்றங்களையும்  காண்கிறோம். உண்மை நிலை என்ன ?

நாங்கள் ஊமைகள் அல்ல. அது பெரிதாக்கப்படுகிறது. அவசர காலச் சட்டத்தை  திரும்பக் கொண்டு வர அவர்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால் அதன்  விளைவுகள் துப்பாக்கிக் குற்றங்களுடன் மட்டும் நிற்கப் போவதில்லை.

 

TAGS: