2,000 ஏக்கர் நிலம்: தேசிய நில நிலக் கூட்டுறவுச் சங்கம் ஒதுங்கி இருக்க வேண்டும்

m-kulasegaran

பேரக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஈராயிரம் ஏக்கர் நில விவகாரத்தில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தலையிடக்கூடாது என்கிறார் ஜனநாயக செயல் கட்சியின் முக்கியத்தலைவரும் ஈப்போ பாராட் நடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன். அவரது முழுமையான பத்திரிகைச்செய்தி வருமாறு.

வி.டி. சம்பந்தனால் அன்று உருவாக்கப்பட்ட தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் இன்று வரை தாக்குப்பிடிக்கிறதென்றால் அதற்கு முக்கியமான காரணம் அதன் முறையான நிர்வாகமும் இலாபகரமான முதலீடுகளும்தான் என்றல் அது மிகையாகாது. அதனால்தான் அச்சங்கத்தினால் பங்குதாரர்களுக்கு நல்ல வருட ஈவும், சலுகைகளும் வழங்க முடிகிறது.

இதன் வெற்றிக்கு இன்னொரு காரணம் அகச்சங்கத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் சோமாவின் சீரிய உழைப்பும், வழிகாட்டியும்தான்.

nlfcsஇச்சங்கம் சமீபத்தில் பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த அதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள வீரசிங்கத்தின் தலைமையில் உள்ள  ஓர் அறவாரியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக அல்லது செய்யவிருப்பதாக   பத்திரிகை வாயிலாக  அறிந்தேன்.

வீரசிங்கம் அவர்களால் அமைக்கப்பட்ட இந்த புதிய அறவாரியம் குறித்து பல சந்தேகங்களும், சர்ச்சைகளும், கண்டனக் குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ம.இ.காவினரே அதிருப்தி அடையும் வகையில் இந்த புதிய அறவாரியத்தில் பல கோளாறுகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போதைய பேராக் ம.இ.கா தலைவரான  கணேசன் கூட தனக்கு இதுப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அறிக்கை விட்டிருக்கின்றார்.

அதன் ஒப்பந்தத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதன் ஷரத்துக்கள் சில வற்றில்  கூட்டுறவுக் கழக வழக்குரைஞர்களும், இயக்குனர்களும் அதிர்ப்தி தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

அதன் உறுப்பினர்கள் முறையாகத் தெர்ந்தெடுக்கப்பட்டனரா? அல்லது தனிபட்ட முறையில் வீரசிங்கம் அவர் விருப்பதின் பேரில் வேண்டியவர்களைத் மட்டும் தேரந்தெடுத்துக்கொண்டாரா? இயக்கங்களைச் சார்ந்தவர்களென்றால் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் அவர்களுக்கு முறையான அனுமதியை வழங்கியுள்ளனவா? சட்ட சிக்கல்களை ஆராய்ந்த பின்னர்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனரா?

மந்திரிபுசார் உறுப்பினர்களை அறிவிப்பு செய்தாலும் அதனை தேர்ந்தெடுத்தவர் வீரசிங்கம் என்கின்ற வகையில், அதன் பிறகு உறுப்பினர்களுக்கு சட்டச்சிக்கல்கள் எதுவும் வருமேயானால் வீராதான் அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். பேராமந்திரிபுசார் மீது பழிபோட்டு நழுவி விடமுடியாது.  மேலும் தமிழ்ப்பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு பாடுபடும் இயக்கங்களின் பிரதிநிதித்துவம்  அதில் இருக்கின்றதா போன்ற விவரங்களும்  தெரியவில்லை.

இவ்வளவு குழப்பங்கள் ஊடே தள்ளாடிக்கொண்டிருக்கும் இந்த புதிய அறவாரியத்தின் நிலை இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் தே.நி.கூட்டுறவுக் சங்கம் சிறிது காலம் அதனின்றும் விலகி நிற்பதே சரி என்று படுகிறது.

முதலில்,  தமிழ்ப்பள்ளிகளை முன்னிறுத்தி ஒரு கூட்டு அறவாரியம் அமைத்திடல் வேண்டும். அவ்வாரியம் எல்லா தரப்பினரையும் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் புற வளர்ச்சிக்கு பாடுபடும் இயக்கங்களைச் சார்ந்திருக்க வேண்டும்.

அப்படி முறையாக பதிவு செய்யப்பட்ட வாரியம் மட்டுமே இந்த 2000 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க உரிமைப் பெற்றது. இந்த வாரியமே அதன் இயக்குனர்களைக் கொண்டு எந்த மேம்பாட்டு நிறுவனம் அந்த நிலத்தை அபிவிருத்தி செய்யக் தகுதி வாய்ந்தது என்று தீர்மானிக்க வேண்டும். அந்த மேம்பாட்டு நிறுவனம் தே.நி.கூட்டுறவுச் சங்கமாகக்கூட இருக்கலாம் அல்லது வேறு ஒன்றாகக்கூட இருக்கலாம். அதைத் தேர்ந்தெடுக்கக் கூடிய கடமையும் உரிமையும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்களிடம் மட்டுமே உள்ளது.

veerasingamஆகையால், இவ்வேளையில், இன்னும் எந்த அமைப்பு அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்த நிர்வகிக்கப் போகிறது என்று தெளிவாக தெரியாத நிலையில், எந்த ஒரு மேம்பாட்டு நிறுவனத்தையும் அடையாளம் காண்பதுவும் அல்லது தேர்வு செய்வதுவும்  ஒரு விவேகமற்ற செயலாகவே கருத வேண்டியுள்ளது.

எதைச் செய்யக் கூடாதோ அதைத்தான் இப்பொழுது வீரசிங்கம் செய்து கொண்டிருக்கிறார். மாட்டைக் வண்டிக்கு முன்னால் கட்டுவதற்கு பதில் பின்னால் கட்டிக் கொண்டிருக்கின்றார். ஆகவே, நல்ல பெயரோடு சிறப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கமானது, பேராக்கில் அமையவிருக்கும் அறவாரியத்தின் “உள்நாட்டுப்” பிரச்சனைகளும் சிக்கல்களும் ஒரு தெளிவான தீர்வை எட்டும் வரை எந்த ஒரு விதத்திலும் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வது கூட்டுறவுச் சங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.

 

 

 

TAGS: