கிட் சியாங்: மத்திய நிர்வாகக் குழு தேர்தல் மீது பொது விசாரணைக்கு டிஏபி தயார்

DApகடந்த ஆண்டு டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு நிகழ்ந்த தேர்தலில்  முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பொது விசாரணையை நடத்த  கட்சி தயாராக இருப்பதாக அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சொல்கிறார்.

என்றாலும் அந்த விவகாரம் கீது உண்மைகளை கண்டுபிடிக்க அவ்வாறு
செய்வதற்கு ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் தயாரா என அவர்  வினவினார்.

“டிஏபி-யை மோசமாக சித்தரிப்பதற்கும் அழிப்பதற்கும்’ அம்னோ/பிஎன் படை  ஜோடித்துள்ள பொய்களை முறியடிப்பதற்கு பொது விசாரணை நடத்த டிஏபி  தயாராக உள்ளது.”

“ஆனால் உண்மையை கண்டுபிடிக்க அத்தகைய விசாரணையை நடத்த ஆர்ஒஎஸ்  தயாரா ?” என அவர் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.

மத்திய நிர்வாகக் குழுவுக்கு டிஏபி மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என  ஆர்ஒஎஸ் உத்தரவிடுள்ளதற்கு லிம் பதில் அளித்தார்.

ஆர்ஒஎஸ் தனது உத்தரவுக்கான காரணத்தையோ அல்லது சட்ட விதிகளையோ  தெரிவிக்க மறுத்துள்ளது.

 

TAGS: