‘ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது தவறு செய்யாது.’
அமைச்சர்: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது
ஜெரோனிமோ: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் சொல்கிறார். குருப் அவர்களே நீங்கள் அந்த விஷயத்தை பெர்க்காசா, ஜாத்தி, பெர்க்கிடா உறுப்பினர்களிடம் அவர்களுடைய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டும்.
உண்மையாகச் சொன்னால் நீங்கள் சொல்வது வெறுமையாகத் தோன்றுகிறது. மலாய் பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா கேட்டுக் கொண்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ? ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அம்னோ பாரு தடை விதித்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ?
இரண்டு மலாய் நிருபர்கள் தேவாலயத்தில் ரகசியமாக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ? பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் எண் பதிக்கப்படும் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ?
தேவாலயங்களுக்கு எரியூட்டப்பட்ட போது நீங்கள் எங்கே இருந்தீர்கள் ? நீங்கள் அதிகம் பேசுகின்றீர்கள். ஆனால் நடவடிக்கை என வரும் போது நீங்கள் பூஜ்யம்.
கேஎஸ்என்: பெர்க்காசா தலைவர்களான சுல்கிப்லி நூர்டின், இப்ராஹிம் அலி, கல்வியாளரான ரித்துவான் தீ, முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, பேராக் முப்தி போன்றவர்கள் முஸ்லிம் அல்லாத சமயங்களையும் இனங்களையும் இழிவுபடுத்திய போது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ?
எல்லாவற்றுக்கும் மேலாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல அந்தத் தீவிரவாதிகளில் இருவரை அம்னோ பாரு தேர்தலில் நிறுத்தியது. (ஒருவர் நேரடியாகவும் இன்னொருவர் மறைமுகமாகவும்) அவர்கள் இருவரும் தோற்று விட்டனர். அவர்களைத் தேர்வு செய்தவர்களுக்கு அது நிச்சயம் வெட்கத்தைத் தந்திருக்க வேண்டும்.
அந்த முடிவு எல்லா சமயங்களையும் சார்ந்த மக்கள் முதிர்ச்சி அடைந்து
விட்டதைக் காட்டியது. ஆனால் அரசாங்கம் குறிப்பாக அம்னோ அத்தகைய தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்கின்றது.
நீங்கள் இப்போது சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.
தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லாத சமயங்களை இழிவுபடுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
முஸ்லிம் அல்லாதார் இஸ்லாத்தை இழிவுபடுத்தியிருந்தால் என்ன நடக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
அடாம் அடில்: ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது தவறு செய்யாது. துணைப் பிரதமர் முஹைடின் யாசின், இப்ராஹிம் அலி, சுல் நூர்டின், முன்னாள் அமைச்சர் நோ ஒமார், ரித்துவான் தீ, மஸ்லான் இஸ்மாயில் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குருப் சொல்லியிருந்தால் ஒரளவு அவரது அறிக்கையை நம்பலாம். இல்லை
என்றால் அவை பிஎன் சொல்லும் பொய்கள், பொய்கள், பொய்களே.
ஜெஸி: வலிமை இல்லாத அமைச்சர் ஒருவருடைய இன்னொரு வெற்றுப் பேச்சு இதுவாகும். முக்கிய நாளேடுகளில் வெளியாகும் இன, சமய தாக்குதல்களை பார்த்தால் வேறு விதமான எண்ணம் தான் ஏற்படுகின்றது.
அவர் இன்னொரு உலகத்தில் வாழ்வதாக எண்ணுகிறேன். நமது பிரதமரைப் போல நடப்பு நிகழ்வுகளை அவரும் அறியவில்லை.
——————————————————————————–
ஜொசப் குருப் இது பற்றிப் பேச தகுதி இல்லாத ஓர் அமைச்சர். இப்ராஹிம் அலிக்கு இருக்கும் ஓர் அரசியல் வலிமை இவருக்கு இல்லை!
“ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார்”