லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவையா அல்லது உண்மை கசக்கிறதா ?

lee‘லீ சொல்வது சரியா அவர் நெற்றியடி கொடுத்துள்ளாரா ? இல்லை என்றால்  அரசியல்வாதிகள் ஏன் அவருடைய பொருத்தமற்ற கருத்துக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் ?’

அன்வார்: லீ-யின் எண்ணங்கள் காலம் கடந்தவை

அடையாளம் இல்லாதவன்#70881335: மலேசியா பற்றியும் அதன் இன அடிப்படை அரசியல் பற்றியும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ கூறியுள்ள  கருத்துக்களை பிகேஆர் மூத்த தலைவர் ஒதுக்கக் கூடாது.

அது அவருடைய கடைசிப் புத்தகமாகவும் இருக்கலாம். சிங்கப்பூர், மலேசியா,  ஆசியான், சீனா, அமெரிக்கா, உலகின் மற்ற பகுதிகள் குறித்த தமது  எண்ணங்களை அவர் ‘வெளிப்படுத்தியுள்ளார்’.

அவருடைய வார்த்தகைகளை நீங்கள் படித்தால் மலேசியா வெற்றி காண  வேண்டும் என அவர் விரும்புவது தெரியும்.

புரோர்ட்: லீ சொல்வது உண்மை. இன அடிப்படைக் கொள்கைகள் நாட்டை  திறமையாக ஆளவும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் நமக்கு உள்ள  ஆற்றலை சீர்குலைத்து விட்டது.

நியாயமானவன்: லீ தமது அந்திம காலத்தில் கூட அரசியல் களத்தில் இரு புறமும்  உள்ள அரசியல்வாதிகளை சீண்டி விடும் ஆற்றலைப் பெற்றுள்ளார். நான்  கருத்தை விரிவாக எழுத எண்ணவில்லை. நமது அரசியல்வாதிகளிடம் இந்தக்  கேள்வியை மட்டும் எழுப்புகிறேன்.

லீ சொல்வது சரியா அவர் நெற்றியடி கொடுத்துள்ளாரா ? இல்லை என்றால்  அரசியல்வாதிகள் ஏன் அவருடைய பொருத்தமற்ற கருத்துக்களுக்குப் பதில்  சொல்ல வேண்டும் ?

பிபூத்தே: மலேசியாவை இந்த நிலையில் பார்ப்பதில் லீ மகிழ்ச்சி அடைவார்.  போட்டி இல்லை என்றால் எல்லாம் சிங்கப்பூருக்கே கிடைக்கும். ஊழல், விரயம்,  மேலோட்டமான கல்வி ஆகியவற்றை நாம் தொடர்ந்தால் சிங்கப்பூர் சந்தோஷமாக  கைகளைத் தட்டிக் கொண்டிருக்கும்.

சிங்கப்பூர் டாலர் நமது ரிங்கிட்டை விட அதிக மதிப்புடன் இருக்க வேண்டிய  அவசியமே இல்லை. அதற்கு நம் தலைவர்களே காரணம்.

பிஎன் கேலிப் பொருள்: சிங்கப்பூர் என்ன அவ்வளவு நன்றாகவா இருக்கின்றது ?  தங்கள் வாழ்க்கையில் கருணை என்பதே இல்லை என சிங்கப்பூரர்களே புகார்  செய்கின்றனர். அவர்கள் அரசாங்கம் நாட்டை பெரிய தொழில் நிறுவனம் போல  நடத்துகின்றது. அங்கு மனிதநேயமே இல்லை.

மலேசியாவிடமும் குறைகள் உள்ளன. ஆனால் நாம் இன்னும் மனிதர்களைக்  கொண்ட நாட்டில் வாழ்கிறோம். நாம் உருவேற்றப்பட்ட எந்திரன்கள் அல்ல. அது  தான் லீ-யின் பாரம்பரியம்.

பெர்ட் தான்: “சுதந்திரமான ஊடகங்களை நாம் அனுமதித்தால் காலம் கடந்த  இனவாத அரசியலிலிருந்து தேவை அடிப்படையிலான சீர்திருத்தத்துக்கு  மாறுவதற்கு 65 விழுக்காடு மலேசியர்கள் தயாராக இருப்பதாக நான் துணிந்து  சொல்ல முடியும்,” என அன்வார் சொல்கிறார்.

என்னைப் பொறுத்த வரை அவர் சொல்வது சரி தான். எல்லா மலேசியர்களையும்  ஒரே மாதிரியாக நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. சரும நிறத்தின்  அடிப்படையின் அல்லாமல் தேவைப்படுகின்றவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.

உதவி தேவைப்படுகின்றவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள், இந்தியர்கள்.  ஆகவே அந்தக் கொள்கையை அமலாக்கினால் வறுமை போய் விடும். அதற்கு  பின்னர் நாட்டுப் பற்று அதிகரிக்கும். பழைய பொற்காலம் மீண்டும் திரும்பும்.

பழைய தலைமுறையைச் சார்ந்த நாம் பள்ளிக்கூடங்களில் மற்ற இன
சகோதரர்களுடன் நன்றாகப் பழகினோம். ஆனால் இன்று நாம் அதனைக்
காணவில்லை.

இன்று பள்ளிக்கூடத்துக்கு, கல்லூரிக்கு, பல்கலைக்கழகத்துக்குச் செல்லுங்கள். இளைஞர்கள்  இன அடிப்படையில் பிரிந்து நிற்பதைக் காண முடியும். மலேசியாவுக்கு என்ன  நேர்ந்தது ?

ஸ்விபெண்டர்: மலேசியாவை அம்னோ ஆட்சி செய்தாலும் பக்காத்தான் ஆட்சி  செய்தாலும் அரசியலில் இனமும் சமயமும் ஆதிக்கம் செலுத்தினால் நாடு வீழ்ச்சி  அடையும். சமய, இன அரசியலிலிருந்து நாம் முற்றாக விடுபட வேண்டும்.

டம்போ: லீ தமது புத்தகத்தில் எழுதியுள்ள விஷயத்தைக் காமாலைக் கண்களுடன்  பார்க்கிறார். காரணம் சிலாங்கூர் உட்பட பக்காத்தான் மாநிலங்களில் நடக்கும்  உண்மை நிலை அது தான்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் காலியாக உள்ள பதவிகளுக்கு திறமையான  முதுநிலை மலாய்க்காரர் அல்லாத அதிகாரிகளை நியமித்துள்ளதா ?

இன அடிப்படை அரசியல் தான் இன்றைய நிலை, பக்காத்தான் மாநிலங்களிலும்  கூட.

 

 

TAGS: