அன்வார்: பொதுத் தேர்தல் முடிவுகள் மீது சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் வழி இருக்கின்றது

anwarமே 5 பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பதில் தனக்கு உள்ள எல்லா சட்ட  வழிகளையும் பக்காத்தான் ராக்யாட் இன்னும் பயன்படுத்தி முடிக்கவில்லை என  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.

“அடுத்த மாதம் அழியா மை தொடர்பில் மேலும் சில விண்ணப்பங்கள்
விசாரணைக்கு வருகின்றன,” என அவர் கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம்  கூறினார்.

பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் தாக்கல் செய்த எல்லா தேர்தல் மனுக்களும்  பல்வேறு இடங்களில் தேர்தல் நீதிமன்றங்கள் தொழில்நுட்ப காரணங்களின்  அடிப்படையில் நிராகரித்துள்ளதால் பக்காத்தானின் அடுத்த நடவடிக்கை என்ன  என்று அவரிடம் வினவப்பட்டது.

தொடக்கக் கட்ட ஆட்சேபனைகள் அடிப்படையில் அந்தத் தேர்தல் மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டதை அன்வார் ஏற்கனவே குறை கூறியிருந்தார்.