போலீசாரின் தலையாய வேலை- பன்றித் தலை கெத்துபாட் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதாகும்

khalid“மலேசியாவில் இதுவும் நடப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  வன்முறைக் குற்றங்கள் போன்ற கடுமையான விஷயங்கள் அன்றாடம்  நிகழ்கின்றன. ஆனால் இங்கு நமது ஐஜிபி சிறிய சிறிய விஷயங்களில் கவனம்  செலுத்துகிறார்”

‘பன்றித் தலை கெத்துபாட்’ குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்

தனா55: தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலித் அபு பாக்கார் மீண்டும்  தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.

முகநூலில் வெளியான பன்றித் தலை கெத்துபாட் அவமானம் பற்றி ஐஜிபி  கருத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. போலீஸ் படையில் உள்ள கீழ் நிலை  அதிகாரி ஒருவரே நிலைமையைக் கையாள முடியும்.

கர்மா: காலித் அவர்களே, நீங்கள் அந்த நபரை அடையாளம் கண்டு அவர் அந்த  நபர் முஸ்லிமாக இருந்தால் தயவு செய்து மௌனமாக இருக்க வேண்டாம்.  அம்பலப்படுத்துங்கள்.

கடந்த காலத்தில் பள்ளிவாசல் வளாகத்துக்குள் பன்றித் தலையை வீசிய நபரை  நீங்கள் பிடித்தீர்கள். அவருடைய அடையாளத்தை அறிய நாங்கள் இன்னும்  காத்துக் கொண்டிருக்கிறோம்.

பைபிள்களில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது போன்று எந்தக் காரணங்களைச்  சொல்லாமல் சமயத்தை இழிவுபடுத்தும் எல்லா விவகாரங்களையும் நீங்கள்  கவனித்தால் யாரும் எந்தச் சமயத்தையும் இழிவுபடுத்த துணிய மாட்டார்கள்.

துரதிர்ஷ்டவசமாக மற்ற சமயங்களை அவமானப்படுத்துவது ‘பாதுகாப்பானது’ என  சிலர் எண்ணுகின்றனர். நீங்கள் அவர்களைத் தண்டிக்க மாட்டீர்கள் என்பதும்  அவர்களுக்கும் தெரியும்.

மூங்கில்: இனவாத நெருப்பை தூண்டி விடும் இன்னொரு முயற்சியே இதுவாகும்.  மறுசுழற்சி செய்யப்பட்ட அந்த தந்திரத்துக்குப் பெரும்பான்மை மலேசியர்கள்  பலியாகாமல் இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரா: அது போலி முகநூல் கணக்கு என்றால் அது எங்கிருந்து வந்தது என்பதைப்  போலீசார் ஆராய வேண்டும். உண்மையான முகநூல் கணக்கின் சொந்தக்காரரை  அல்ல. இல்லை என்றால் ஐஜிபி பெயரில் யார் வேண்டுமானாலும் முகநூல்  கணக்கைத் திறக்கலாம். அப்போது ஐஜிபி தம்மையே விசாரித்துக் கொள்வாரா  எனப் பார்ப்போம்.

சியாங் மாலாம்: போலீசார் சிறிய விஷயங்களில் தங்கள் வளங்களை விரயம்  செய்து கொண்டிருக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. புதிய  ஐஜிபி சிறந்த போலீஸ் படையை உருவாக்குவார் என நான் எண்ணியிருந்தேன்.  ஆனால் அது சரிந்து கொண்டிருக்கிறது.

ஊழல் இல்லை: குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.  முட்டாள்தனமான முகநூல் பதிவுகள் மீது எங்கள் வரிப்பணத்தை (ரிங்கிட்)  வீணாக்க வேண்டாம்.

ஜெஸி: உங்கள் எஜமானர் சொன்ன 260,000 கிரிமினல்களை பிடிக்க முனையுங்கள்.

அல்லிஸ்: மலேசியாவில் இதுவும் நடப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. வன்முறைக் குற்றங்கள் போன்ற கடுமையான விஷயங்கள்  அன்றாடம் நிகழ்கின்றன. ஆனால் இங்கு நமது ஐஜிபி சிறிய சிறிய விஷயங்களில்  கவனம் செலுத்துகிறார்.

 

 

TAGS: