ஆர்ஒஎஸ் காரணம் கொடுக்காதது கொடுமையானது

DAp‘இன்று முக்கியமான சொல் பொறுப்புணர்வாகும். ஆர்ஒஎஸ் தனது முடிவை  விளக்க முடியாது என்றால் அது பரிசீலிக்காமல் முடிவு செய்துள்ளது என்பதற்கு  சமமாகும்’

ஆர்ஒஎஸ்: புதிய டிஏபி தேர்தல்களுக்குக் காரணம் சொல்ல வேண்டிய  அவசியமில்லை

அடையாளம் இல்லாதவன்_4031: புதிய கட்சித் தேர்தல்களை நடத்துமாறு  டிஏபி-க்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ சொல்வதற்கு ஆர்ஒஎஸ் என்ற சங்கப்  பதிவதிகாரி அலுவலகம் காரணம் சொல்ல வேண்டியதில்லை என்பது எனக்கு  அதிர்ச்சியை அளித்துள்ளது.

இங்கு ஏதோ கோளாறு தெரிகிறது. ஒரு நபர் ஏன் ஜெயிலுக்குப் போக வேண்டும்  அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என்பதற்கு நியாயமான காரணங்களைச்  சொல்லாமல் நீதிபதி ஒருவர் தீர்ப்புச் சொல்ல முடியுமா ?

கர்மா: அதிகாரி ஒருவர் காரணம் காட்டாமல் நடவடிக்கை எடுத்தால் அது முழுக்க  முழுக்க கொடூரமானது. அது அதிகார அத்துமீறல். மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் எந்த அரசாங்க அதிகாரியும் காரணம் சொல்லாமல் நடவடிக்கை  எடுக்க முடியாது.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உட்பட டிஏபி உறுப்பினர்கள் அனைவரும் வரி செலுத்துகின்றனர். ஆர்ஒஎஸ் ஒர் அரசாங்க அமைப்பு. அது தனது நடவடிக்கைக்குக் காரணம் சொல்ல வேண்டும்.

இல்லை என்றால் அது ‘makan gaji buta’ ஆகும் (வேலை செய்யாமல் சம்பளம் பெறுவது). அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

கிட் பி: தங்கள் முடிவுகளுக்கான காரணத்தை விளக்க வேண்டிய அவசியம்  இல்லாமல் அரசாங்க அதிகாரிகள் விருப்பம் போல செயல்பட்ட காலம் மலையேறி விட்டது.

இன்று முக்கியமான சொல் பொறுப்புணர்வாகும். ஆர்ஒஎஸ் தனது முடிவை விளக்க முடியாது என்றால் அது பரிசீலிக்காமல் முடிவு செய்துள்ளது என்பதற்கு சமமாகும்.

சைக்கோ: முதலாவதாக டிஏபி தகுதி பெற்ற எல்லா உறுப்பினர்களுக்கும்/ பேராளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை. அத்துடன் கணினிக் கோளாறு  எனச் சொல்லி ஒரு மாதத்திற்குப் பின்னர் முடிவுகளை திருத்தியதாகவும் கூறப்படுகின்றது.

தோல்வி கண்டவர் வெற்றியாளராகிறார். வெற்றியாளர் தோல்வி காண்கிறார். லிம்  குவான் எங் அந்த குழப்பத்தை உருவாக்கினார். ஆனால் இப்போது ஆர்ஒஎஸ்  மீது பழி போட்டு கவனத்தைத் திசை திருப்ப முயலுகிறார். தந்தை-தனயன் குழுவுக்கு சிறந்த திரைப்பட விருது கொடுக்கலாம்.

அடையாளம் இல்லாதவன்_40f4: அந்த ஆர்ஒஎஸ் கடிதத்தை அம்னோ தயாரித்திருக்க வேண்டும். டெஸ்மண்ட் தாஸ் மைக்கல் தாஸ் என்ற பலியாடு அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அந்தக் கடிதத்திற்குப் பின்னணியில் இருப்பவர்களே சதிகாரர்கள்.

மோசடி எதிர்ப்பாளன்: அந்தக் கடிதத்தில் ஏன் சங்கப்பதிவதிகாரி
கையெழுத்திடவில்லை ?

மலேசியன்: ஆர்ஒஎஸ் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். தேர்தல்  ஆணையத்தைப் பற்றி என்ன சொல்வது ? அழியா மை எளிதாக அழிந்த போது  அது ஏன் புதிய தேர்தல்களை நடத்தவில்லை ?
——————————————————————————–
ஆர்

TAGS: