எதிர்வரும் மசீச கட்சித் தேர்தல்களில் தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதாகவோ அல்லது போட்டியிடப் போவதில்லை என்றோ தாம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறிக் கொண்டுள்ளார்.
ஆனால் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை எனச் சுவா
வாக்களித்துள்ளதாகவும் அதனை அவர் காப்பாற்றுவர் எனத் தாம் நம்புவதாகவும் துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு கட்சியை சீர்திருத்த தாம் போட்டியிட விரும்புவதாக லியாவ் சொன்னார் என்றும் ஒரியண்டல் டெய்லி நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனச் சுவா அறிவித்ததால் நான் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என்றும் லியாவ் சொன்னார்.