“மக்களின் வரிப்பணத்தில் அந்நியருக்குத் தொழில் பயிற்சியா, ஏன்?”

உங்கள் கருத்து: மைகார்ட் மோசடி:அந்நியர்கள் தொழில்பயிற்சிக்காக ஓய்வுத்தலம் சென்றனர்

ஜேபிசுவாரா: தொழில்முனைவர் பயிற்சிக்குச் செல்லும் அந்நியருக்குப் போலீஸ் வழித்துணையா. கேட்பதற்கு நல்லா இல்லையே. போலீஸை இப்படி வீணடிக்கக்கூடாது. இவ்விசயம் குறித்து பாஸ் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சு இன்னும் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்.

இல்லையேல், எங்கள் எம்பிகள் இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசென்று அந்நியர்கள் வாக்காளர்கள் ஆக்கப்பட்ட விவகாரங்கள் பற்றியெல்லாம் கேள்வி எழுப்புவர்.

அப்2யு: வாய்க்கு வந்தபடியெல்லாம் சொல்லலாம், மலேசியர்கள் அதை நம்பி விடுவார்கள் என்று நினைக்கிறார்களா, இந்த அதிகாரிகள்.

அந்நியர்கள் தொழில்முனைவர் பயிற்சிக்கு அங்கு செல்வதாக இருந்தால் அதை ஏன் இரகசியமாகச் செய்ய வேண்டும்? அதில், இந்தோனேசியரும் வங்காள தேசிகளும் மட்டும்தானே இருந்தனர், தாய்லாந்தினர், கம்போடியர், நேபாளிகள், இந்தியர்கள் முதலியோர் இல்லையே, ஏன்?

ஒரு சில வாக்குகளுக்காக தாய்நாட்டையே விற்கத் துணிந்து விட்டார்கள், பாவிகள். இவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் தோற்றுப்போனால் என்னவெல்லாம் செய்வார்கள், சற்று எண்ணிப் பாருங்கள்.

எல்லாருக்கும் நியாயம்: அங்கு ஏதோ நடந்திருக்கிறது. பாஸ்தான் அதைக் கண்டறிய வேண்டும்.

சரவாக்கியன்_3ff9: நம் நாட்டு மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை ஆனால், மக்களின் வரிப்பணத்தில் அந்நியர்களுக்குத் தொழில்பயிற்சி! நல்லா இருக்குதய்யா.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் உள்ளூர் மக்களின் சிறுதொழில்களை எல்லாம் விழுங்கி ஏப்பமிட்டு விடுவார்கள் என்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா? அல்லது, வணிக வாய்ப்பையும் குடியுரிமையும் வழங்கி அதற்குக் கைமாறாக வாக்குகளைப் பெறுவதுதான் இதன் அந்தரங்கமா?
யாரோ நாட்டை விலைகூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிமான் பாவ்: எங்கள் பணத்தில் வெளிநாட்டவருக்குத் தொழில்முனைவர் பயிற்சியா? விளையாடாதீர்கள். யாரய்யா, இதை நம்புவார்?

இங்கேயே வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து போனதால் பெரும் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.அரசாங்கம் வெளிநாட்டவருக்கு மலேசியாவில் பணம் பண்ணும் வழியைச் சொல்லித்தருகிறதாம்- செப்பாங் ஓசிபிடி சுப்பிரெண்டெண்ட் இம்ரான் அப்துல் ரஹ்மான் கூறுகிறார். என்ன பட்டவர்த்தனமான ஒரு பொய். 

ஸ்விபெண்டர்: என்ன ஒரு நொண்டிச் சாக்கு. அந்த வெளிநாட்டவருக்குத் தொழில்முனைவர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்?

ஆறு பேருந்துகள் பாங்கி ஓய்வுத்தலத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழித்துணைக்கு போலீசும் சென்றது ஏன்?

பெயரிலி_403c: எல்லாம் மர்மமாக இருக்கிறதே. அவர்களைச் செய்தியாளர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? பயிற்சி என்றால் அதற்கு ஏற்பாடு செய்தது யார்? தொழில்முனைவர் பயிற்சிக்கு அத்தனை போலீசாரின் காவல் தேவையா?

TAGS: